தமிழகத்தில் நீண்ட நாளைக்கு பிறகு சூப்பர் மாற்றம்.. ஆக்டிவ் கேஸ்கள் அதிரடி சரிவு.. மாறும் நிலைமை!
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1892 பேர் ஒரே நாளில் மீண்டனர். தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 20ஆயிரத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. தினமும் கணிசமான அளவு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,95,935 ஆக உயர்ந்துள்ளது

தேறியவர்கள்
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,892 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,41,432 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக உயர்ந்துள்ளது.

நோயாளிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நீண்ட நாளைக்கு பிறகு 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது தமிழகத்தில் நேற்று 20,225 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 19,864 ஆக குறைந்துள்ளது.

குறையும் பாதிப்பு
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரத்தை பார்த்தால் அதிகபட்சமாக கோவையில் 198 பேரும், சென்னையில் 193 பேரும், ஈரோட்டில் 147 பேரும், தஞ்சாவூரில் 112 பேரும், சேலத்தில் 94 பேரும், செங்கல்பட்டில் 98 பேரும், திருப்பூரில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் மட்டும் அதிகமாக 2303 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2074 ஆகவும், ஈரோட்டில் 1820 ஆகவும். செங்கல்பட்டில் 1123 ஆகவும், தஞ்சாவூரில் 1102
ஆகவும் உள்ளது. ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications