"விசுவாசம் குறையல.." சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா போட்டோவுடன் அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில், உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. அதில் குறிப்பாக, தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றபோது அவரது சட்டைப்பையில் இன்னுமே ஜெயலலிதா போட்டோ தான் இருந்தது.

தமிழ்நாடு முதல்வராக விஜய் நேற்றைய தினம் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து 17-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. இன்றைய தினம் தற்காலிக சபாநாயகர் கருப்பையா அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் முதல்வர் விஜய் உறுதிமொழி ஏற்ற நிலையில், அதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், மாஜி முதல்வர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

17th TN Assembly KA Sengottaiyan Swears In as MLA with Jayalalithaa s Photo in Pocket

இதில் பல சுவாரசிய நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக, தவெக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மூத்த அரசியல்வாதியான கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏவாகப் பதவியேற்றபோது அவரது சட்டைப்பையில் இன்னுமே ஜெயலலிதா போட்டோ தான் இருந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் தனது உறுதிமொழியை ஏற்க மேடைக்கு வந்தபோது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருந்தார்.

அதிமுக-வில் பல தசாப்தங்களாக ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமான தளபதியாக வலம் வந்த செங்கோட்டையன், கடந்த ஆண்டுதான் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது விஜய்யின் அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பில் இருந்தாலும், ஜெயலலிதாவின் மீதான விசுவாசத்தை இந்தப் பதவியேற்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+