விஜயராஜ்..விஜயகாந்த் ஆனது எப்படி..ஒரே வருடத்தில் 18படங்கள்..திரைத்துறையிலும் முத்திரை பதித்த கேப்டன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், அரசியலில் மட்டும் இன்றி திரைத்துறையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

விஜயகாந்த் அரசியலுக்கு வரும் முன்பே 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனை, ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு லட்சக்கணக்கில் கல்வி நிதியுதவி, எம்.ஜி.ஆர் காது கேளாதோர்-வாய் பேசாதோர் பள்ளி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை என பல்வேறு உதவிகளை வாரி வழங்கிய வள்ளலாக இருந்தார்.

18 films in a single year, Captain Vijayakanths unshakable record in the film industry

குஜராத் பூகம்பம், கார்கில் போர், சுனாமி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து எனப் பல சோக நிகழ்வுகளுக்குத் தன் சொந்தச் செலவில் நிவாரணங்களை விஜயகாந்த் மெய்சிலிர்க்க வைத்தார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களான தானே புயல், ஆந்திரா புயல், ஒடிசா வெள்ளம் உள்ளிட்டவைகளுக்கும் முதல் ஆளாக முன்வந்து நிவாரணங்கள் வழங்கினார். இப்படி விஜயகாந்தின் கொடையுள்ளத்தையும் அவரது சாதனைகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தனது நண்பர்களின் தூண்டுதல், , தனக்கிருந்த ஆர்வம் ஆகிய இரண்டும் சேர்ந்து விஜயகாந்தை சினிமா உலகத்திற்குள் தள்ளியது. சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்த விஜயகாந்த், பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை' படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகம் ஆனார்.

விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். சட்டம் ஒரு இருட்டறை', தூரத்து இடிமுழக்கம்', அம்மன்கோவில் கிழக்காலே', உழவன் மகன்', சிவப்பு மல்லி' என வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம் வந்தார். கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+