வக்கீலாக 18 ஆயிரம் வழக்குகள்! வெளிநாடு போகாத நீதிபதி? ஆர் மகாதேவன் அப்பா யார் தெரியுமா?
சென்னை: உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ள ஆர்.மகாதேவன் இதுவரை வெளிநாடுகளுக்குச் செல்லாதவர் என்பது தனி ஒரு வழக்கறிஞராக அவர் 18 ஆயிரம் வழக்குகளில் வாதாடியவர் என்பதும் அவரது தந்தை மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது பலரும் அறியாத தகவல்களாக உள்ளன.
தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நீதிபதி மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஜூன் 10, 1963 இல் பிறந்த இவர், உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் செயல் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

நீதிபதி மகாதேவன் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, 1989 ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இந்த மாதம் 11 அன்று, உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி சிங் மற்றும் மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்றமாக உயர்த்த பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நீதிபதி என் கோடீஸ்வர் சிங் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோரை நியமித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இன்று அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இன்று புதியதாகப் பதவியேற்றுக் கொண்ட 2 நீதிபதிகள் மூலம் உச்சநீதிமன்றத்தில் காலியாக நீதிபதி பதவிக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிபதி மகாதேவன் யார்? இவரது பின்புலம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் அதிகரித்துள்ளது. பலருக்கும் நீதிபதி மகாதேவனைத்தான் தெரியும். ஆனால், இவரது தந்தை மா. அரங்கநாதன் தமிழ் எழுத்தாளர்களின் தனித்துவமானவர். அவரை தமிழில் எழுதிய வந்த மெளனி என்ற எழுத்தாளருடன் பலரும் ஒப்பிட்டுப் பேசி உள்ளனர். இவர் சென்னையில் மூன்றில் என்ற ஒரு இலக்கிய பத்திரிகையை நடத்திவந்தார்.
50 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னையில் வசித்து வந்த எழுத்தாளர் அரங்கநாதன் சென்னை மாநகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்து அங்கே 2017 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது தந்தையின் பெயரில் நீதிபதி மகாதேவன் ஆண்டு தோறும் 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கி வருகிறார்.
இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற மகாதேவன் 'பித்தா பிறை சூடி பெருமானே' என்ற பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டி பேசியது பலரையும் கவர்ந்துள்ளது. அவரது தந்தையைப் போலவே எழுத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் பல இலக்கிய விழாக்களில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் உரையாற்றிய போது நீதிபதி மகாதேவன், "வாழ்க்கையில் தனக்காக எதையுமே தேடிக்கொள்ளாமல், படிப்பையும் எழுத்தையும் மட்டுமே நேசித்தவர் என் தந்தை. அவர் ஒரு எழுத்தாளர். அவர் பெயர் ம.அரங்கநாதன். தனது எழுத்தின் மூலம் இந்த மனித சமூகத்தின் உன்னதமான கணங்களைப் பதிவு செய்தவர். அவரது வழிகாட்டுதலில்தான் நான் வளர்ந்தேன்.
ஒரு சாதாரணமான வழக்கறிஞராக இந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அடி எடுத்து வைத்தேன். இன்று என் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் என்று அனைத்து வழக்குகளையும் நான் பார்த்திருக்கிறேன். அதன்பின்னர் அரசாங்கத்தின் வழக்கறிஞராக நான் நியமிக்கப்பட்டேன். அதற்கு அரசு என் மீது வைத்த நம்பிக்கைதான் காரணம்.
கிட்டத்தட்ட 1996 தொடங்கி 2000 வரை ஏறக்குறைய 18 ஆயிரம் வழக்குகளை நான் தனிப்பட்ட முறையில் நடத்தி அனுபவம் பெற்றேன். மீண்டும் 2007இல் வணிக வரிகள் சார்ந்த துறையில் நியமிக்கப்பட்டேன். 2012 வரை அதே பணியில் தொடர்ந்தேன். பின்னர் 2013இல் மெட்ராஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். சென்னையில் மட்டுமே வாழ்ந்து அனுபவம் பெற்ற நான் 1988இல் எனக்காக பாஸ்போர்ட் கிடைக்கப் பெற்றேன். அதன்பின்னர் 2023 அதை மீண்டு புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட் அதிகாரியைப் போய் சந்தித்தேன். அப்போது அந்த அதிகாரி கேட்டார், 'ஏன் இந்தக் கடவுச்சீட்டைப் புதுப்பிக்கிறீர்கள்? நீங்கள் இத்தனை ஆண்டுகளில் ஒரு வெளிநாட்டிற்கும் பயணிக்கவே இல்லையே?' என்று. நான் ஆந்திரா, பெங்களூரு, டெல்லி என இந்தியாவில் உள்ள பிறமாநிலங்களைத் தவிர வேறு எந்த நாட்டிற்குச் சென்றதில்லை. ஆனால், உலக எழுத்தாளர்கள் மூலம் ஒவ்வொரு நாட்டுக் கலாச்சாரத்தையும் படித்து அனுபவித்திருக்கிறேன்.

இதுவும் கூட வாழ்க்கையின் பயணம்தான். நான் ஒரு நீதிபதியாகச் சென்னை உயர்நீதி மன்றத்திலே பணியாற்றி இருக்கிறேன். இந்த ஆண்டுடன் 11 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. இதை நான் ஒரு பதவி எனக் கருதாமல், இது எனக்கு விட்ட பணியாக ஏற்று நடந்து கொண்டுள்ளேன். இந்தப் பொறுப்பில் நான் இருந்த காலங்களில் ஒருவரைக் கூட நான் மனம் புண்படும் படி பேசியதில்லை, நடந்து கொண்டதில்லை. படித்து முடித்துவிட்டு வந்த இளம் வழக்கறிஞரையும் அனுபவம் பெற்ற பெரிய வழக்கறிஞரையும் நான் சமமாக நடத்தி இருக்கிறேன். உயர்வு தாழ்வு பார்த்ததே இல்லை" என்று பேசி இருந்தார்.
வாழ்க்கையில் எளிய பின்புலத்திலிருந்து வந்த இவர், இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக உயர்ந்துள்ளது பலரது வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications