தனியார் மருத்துவமனையில் பிரசவம் ஆனாலும் 18000 நிதியுதவி.. முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் செம்ம
சென்னை: டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்க பணியினை தமிழக பொது சுகாரத்துறை இயக்குநரகம் தொடங்கி உள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் போது, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும் நிதியுதவி பெறுவார்கள், அத்துடன் அவர்களுக்கும் அரசு வழங்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி' எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் முதல் நான்கு மாதத்திற்குள் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், கர்ப்பிணிகளின் உடல் திறனை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, 6வது மாதத்தில் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படும். மகப்பேறு காலம் முடிந்து நான்காவது மாதத்தில் இரண்டாவது தவணையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மூன்றாவதாக, குழந்தை பிறந்த ஒன்பது மாதத்தில் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் குழந்தை பிறந்த உடன் ரூ.4,000மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படும். மொத்தமாக 140000 +4000 என அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை 2018ஆம் ஆண்டில், இது மத்திய அரசாங்கத்தின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவுடன் (Pradhan Mantri Ma-tru Vandana Yojana) இணைக்கப்பட்டது. இந்நிலையில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ் பலருக்கும் பணம் கிடைக்கவில்லை. காரணம் கேட்டால், பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை அதிகாரிகள் கூறினார்கள். அதேநேரம் திட்டம் நிறுத்தப்பட்டதாக கடந்த 2023ம் ஆண்டு தகவல் வெளியான போது, அதனை தமிழக சுகாதாரத்துறை அப்போது திட்டவட்டமாக மறுத்தது.
அப்போது அளித்த விளக்கத்தில், மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துடன் இணைந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,000 மட்டும்தான். டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் இணையவழி பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி விடுவிக்கப்படவில்லை.
இது தொடா்பாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டதுடன் மூன்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக சுகாதாரத் திட்ட உறுப்பினா்கள், தில்லியில் உள்ள தேசிய தகவல் மையத்துக்கு நேரில் சென்று, மென்பொருள் பொறியாளா்களுடன் நேரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினா். எனவே, இந்தக் குறைபாடுகள் காரணமாகவே தற்காலிகமாக இத்திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டJ. மாறாக, அது நிறுத்திவைக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு திட்டம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கிறது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்தால் தான் 18000 கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது. இந்நிலையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் (MRMBS) கீழ், தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை பொது சுகாதார இயக்குநரகம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவச சுகாதார சேவைகளைப் பெறுபவர்களுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு தற்போது ஒப்புதல் அளித்தது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தால் 2006 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1.20 கோடி கர்ப்பிணிகள் பயனடைந்துள்ளனர். அதன்படி, ரூ.10 ஆயிரத்து 841 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள் . இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இத்திட்டம் தனியார் மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளும் நிதியுதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களைப் பெற முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications