19 வயசு வாணிக்கு 9 கணவர்கள்! ஸ்ரீகாகுளம் ஆண்ட்டி சந்தியாவின் மூளையே மூளை! பிறகு என்னாச்சு தெரியுமா
சென்னை: ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரின் கர்ஜி தெருவில் வசித்து வருகிறார் 19 வயதான வாணி என்ற இளம்பெண்.. காதல், திருமணம் என்ற பெயரில் 19 வாழ்க்கையிலேயே பலரையும் அதிர வைத்துள்ளார்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள் என்றாலும், வாணியின் செயல்பாடுகள் கர்நாடகாவை விக்கித்து போக செய்து வருகிறது.
ஆந்திராவை சேர்ந்த வாணியை, கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர், ஸ்ரீகாகுளம் துர்கா தேவி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.. திருமணம் முடிந்ததுமே, வாணியை தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்து ரயிலில் அழைத்து சென்றுள்ளார்...

ஸ்ரீகாகுளம் வாணி
விசாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேஷன் வந்தபோது, பாத்ரூம் போவதாக சொல்லி கீழே இறங்கிவிட்டார்.. அதற்கு பிறகு வாணி, அந்த ரயிலில் ஏறவில்லை. பாத்ரூம் சென்ற மனைவியை காணாமல் மாப்பிள்ளை பதறிப்போனார்.. ரயிலுக்குள் தேடி அலைந்தார்.. எங்குமே கிடைக்காமல் விரக்திக்கு ஆளானார்.
அதற்கு பிறகுதான் இச்சாபுரத்தில் உள்ள தன்னுடைய அத்தை வீட்டில் வாணி இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே வாணியின் குடும்பத்துக்கு திருமண செலவாக ஒரு லட்சம் ரூபாயும், பிற செலவுகளுக்காகவும் பணம் கொடுத்திருந்தனர். வாணி அந்தப் பணம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதால், கணவர் வீட்டில் கடுங்கோபம் அடைந்தனர்..
இச்சாபுரத்தில் அத்தை சந்தியா
இதனால் வாணியை தேடி இச்சாபுரத்துக்கு ஓடினார்கள்.. வாணியின் அத்தை சந்தியாவை சந்தித்து, தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர். ஆனால், அவர் பணத்தை திருப்பி தரவில்லை...
ஏற்கனவே வாணியின் நடவடிக்கைகளினால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளை, தற்போது பணமும் தர முடியாது என்று சொன்னதால் நேரடியாக போலீசுக்கே போய்விட்டார்.. வாணியின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளதாக கூறி போலீஸில் புகார் அளித்தார்.
19 வயதில் 9 கல்யாணம்
போலீஸாரும் ரகசிய விசாரணையில் இறங்கினார்கள்.. அப்போதுதான் வாணியின் வண்டவாளங்கள் வெளியே தெரிந்தன.. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகை மற்றும் பணத்துடன் நைசாக எஸ்கேப் ஆவதையே வாணி வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை 8 பேரை திருமணம் செய்துள்ளாராம்.. இப்போது 9-வது திருமணத்தில் தான் வசமாக சிக்கியுள்ளார்.
ஆனால் இப்போது வாணியும், அத்தையும் தலைமறைவாகி உள்ளனர். எனவே இவர்களை தனிப்படை போலீஸார் ஆந்திரா முழுவதும் வலைவீசித் தேடி வருகின்றனர்.
அத்தை செய்த சதிவலை
வாணியை பொறுத்தவரை சிறுவயதிலேயே தாயை இழந்தார். தந்தையிடமிருந்து பிரிந்து, உறவினர்களிடம் வளர்ந்து வந்துள்ளார்.. இதற்கு பிறகுதான் வாணியை தன்னுடைய வலையில் விழ வைத்துள்ளார் அவரது அத்தை...
திருமணமாகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை, பணத்தை அபேஸ் செய்துவிட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்களாம்.. கர்நாடகா, ஒடிசா, கேரளா போன்ற மாநிலங்களில் திருமணம் ஆகாத இளைஞர்களை, இந்த 2 ஆந்திர பெண்களும் தேர்ந்தெடுத்து வந்துள்ளார்கள்.. இவ்வளவும் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது..
கணவர்கள் புகார்
வாணி மீது 9வது கணவர் புகார் தரவும், வாணியால் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி, கேசவரெட்டி உள்ளிட்டோர் போலீசுக்கு சென்று தங்கள் தரப்பு புகார்களை தந்துள்ளனர்.. அந்த திருமணங்களுக்கான போட்டோக்கள், வீடியோக்கள் ஆதாரங்களையும் தந்துள்ளனர்..
19 வயதிலேயே 9 பேரை திருமணம் செய்துள்ள வாணி, இன்னும் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார் என்று தெரியவில்லை.. காவல்துறையினர் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications