தமிழ்நாட்டில் 2,079 பேருக்கு கொரோனா.. சென்னை உள்பட சில மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 58-வது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் நேற்றை விட பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

இறுதிகட்டத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு வெகுவாக குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 25,35,402 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். கோவையில் 4 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 33,724 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,743 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,73,781 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

சென்னையில் மீண்டும் அதிகரிப்பு
27,897 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,42,515 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,46,95,038 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 150 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. நேற்று 137 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று 150 ஆக இருக்கிறது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

காஞ்சிபுரம்
கோவையில் மட்டும் 220 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 118 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 48 பேருக்கும், மதுரையில் 27 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 70 பேருக்கும், திருச்சியில் 76 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 121 பேருக்கும், விருதுநகரில் 22 பேருக்கும், ஈரோட்டில் 128 பேருக்கும், சேலத்தில் 142 பேருக்கும், நாமக்கல்லில் 60 பேருக்கும், தஞ்சாவூரில் 120 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், மதுரையிலும் நேற்றை விட இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications