தமிழ்நாட்டில் 2,205 பேருக்கு கொரோனா.. கொங்கு மண்டலத்தில் தினசரி பாதிப்பு ஆதிக்கம்.. முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 57-வது நாளாக குறைந்துள்ளது. கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இறுதிகட்டத்தில் கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த் அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பும் குறைகிறது
இதனால் மொத்த பாதிப்பு 25,33,323 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். கோவையில் 2 பேரும், கடலூரில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 33,695 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,802 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,71,038 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

28,590 பேருக்கு சிகிச்சை
28,590 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,44,880 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,45,14,538 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 137 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதேபோல் சேலம் உள்பட சில மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கோவை முதலிடம்
கோவையில் மட்டும் 241 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 124 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 38 பேருக்கும், மதுரையில் 25 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 37 பேருக்கும், திருவள்ளூரில் 74 பேருக்கும், திருச்சியில் 79 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 132 பேருக்கும், விருதுநகரில் 24 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், நாமக்கல்லில் 64 பேருக்கும், தஞ்சாவூரில் 152 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட 98 குழந்தைகளுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications