தமிழ்நாட்டில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 58-வது நாளாக குறைந்துள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதேபோல் சேலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

2,312 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஒரு கட்டத்தில் 36,000-க்கும் மேல் சென்ற தினசரி பாதிப்பு ஊரடங்கு தந்த பலன் காரணமாக இப்போது 2,500-க்கு கீழ் வந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு?
இதனால் மொத்த பாதிப்பு 25,31,118 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 7 பேர் இறந்துள்ளனர். கோவையில் 4 பேரும், கடலூரில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 33,652 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,68,236 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

29,230 பேருக்கு சிகிச்சை
29,230 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,47,783 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,44,07,643 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 144 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதேபோல் சேலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது

கோவை நிலை என்ன?
கோவையில் மட்டும் 252 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 127 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 42 பேருக்கும், மதுரையில் 29 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 43 பேருக்கும், திருவள்ளூரில் 71 பேருக்கும், திருச்சியில் 84 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 138 பேருக்கும், விருதுநகரில் 27 பேருக்கும், ஈரோட்டில் 152 பேருக்கும், சேலத்தில் 168 பேருக்கும், நாமக்கல்லில் 69 பேருக்கும், தஞ்சாவூரில் 158 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications