தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறக்க வேண்டும்.. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை
சென்னை: காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டமானது காணொளி காட்சி மூலமாக நடந்தது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில், தமிழ்நாடு தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மே மாதத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய 10 டிஎம்சி தண்ணீரில் 3.8 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளனர் என்றும், எனவே இதில் மே மாதம் பாக்கி உள்ள 6.2 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. மேலும் ஜூன் மாதம் தர வேண்டிய 9.17 டிஎம்சி நீரை தவறாமல், கால தாமதம் இன்றி உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கோரப்பட்டது.
இதேபோல், கர்நாடக அரசு முன் வைத்த வாதத்தில், கர்நாடக அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால் தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட முடியாது என கர்நாடக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் வினீத் குப்தா, "மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட பரிந்துரை செய்தார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது குட்டம் வருகின்ற 21 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , அந்த கூட்டத்தில், "காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த இந்த முடிவின் மீது ஆலோசனை நடத்தப்படும் என்றும், அந்த ஆலோசனைக்கு பிறகு, காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை என்று பரவிய தகவலுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் அனைத்து கூட்டங்களிலும் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் நேரிலோ அல்லது காணொலி காட்சி மூலமாகவோ தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டின் வாதங்களை வலுவாக முன்வைத்து வருகின்றனர். டில்லியில் நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கினை பெறுவதற்கு தேவையான கருத்துகள், தக்க புள்ளி விவரங்களுடன் வலுவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் 94வது கூட்டம் புதுச்சேரியில் 21.03.2024 அன்று நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டனர். இந்நிலையில் உண்மைக்கு புறம்பாக "காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டில்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை" என்ற செய்தி 16.05.2024 நாளிட்ட பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்று தமிழ்நாடு அரசு எத்தகைய உத்தரவும் தெரிவிக்கப்படுகிறது. பிறப்பிக்கவில்லை என இதன் மூலம்
பன்மாநில நதிநீர் பிரச்சனை தொடர்புடைய கூட்டங்களில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட தகுந்த வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், அக்கூட்டங்களில் நேரில் கலந்துகொள்ள தமிழ்நாடு அரசு தேவையான அனுமதியை உடனுக்குடன் அளித்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் திரித்து கூறுவது ஒரு பிரபலமான நாளிதழுக்கு உகந்ததல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications