2 ஆடி அமாவாசைகள்.. பின்னாலயே அந்த "ஸ்பெஷல்" நியூஸ் வருது.. துள்ளி குதிக்கும் மக்கள்.. தமிழக அரசு ரெடி
சென்னை: 2 ஆடி அமாவாசைகள் வருவதால், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை தமிழக போக்குவரத்து கழகம் முனைப்பு காட்டி வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
பொதுமக்களின் நன்மைக்காக தமிழக போக்குவரத்து துறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. குறிப்பாக வார இறுதி நாட்களில் பயணம் மேற்கொள்வதற்கான வசதிகளை செய்து வருகிறது.

எப்போதுமே வார இறுதி நாட்களிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக பஸ் வசதிகளை செய்து வருகிது.
பயணிகள் கூட்டம்: குறிப்பாக, சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற பெருநகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுமே இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பேருந்துகள் சரியாக வருவதில்லை.. அதேபோல, செயல்பாட்டில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையும் போதுமானதாக இருப்பதில்லை என்று பயணிகள் அதிருப்திகளை தெரிவித்து வருகின்றனர்.
அதனால்தான், தமிழக அரசு போக்குவரத்து கழகம், நடப்பு வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 600 சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறது.. இந்த 600 பேருந்துகளில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் (CMBT) இருந்து மட்டும் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாம்.. மற்ற பஸ்கள், மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், நடப்பாண்டில் 2 ஆடி அமாவாசை திதிகள் வரப்போகின்றன.. எனவே, அதற்கேற்ற வகையில், பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது.
நாளை மறுதினம் அதாவது 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது... இந்த முறை ஆடி முதல் நாளே, ஆடி அமாவாசையாக வருகிறது.. மறுபடியும், ஆகஸ்ட் 16ம் தேதி இன்னொரு அமாவாசை வருகிறது.
சிறப்பு பஸ்கள்: இந்த முறை தமிழ் மாதமான ஆடியில் இரண்டு அமாவாசை திதிகள் வருவதால், பக்தர்கள் வசதிக்காக, ஆடி மாத வெள்ளிக்கிழமை கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் அனைத்து மண்டலம், கோட்டங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இன்றைய தினம் போக்குவரத்து அலுவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
அநேகமாக, பக்தர்களின் வசதிக்காக சிறப்பு அறிவிப்பினை போக்குவரத்து அலுவலர்கள் இன்று மாலைக்குள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி ஒரு வசதியை தெற்கு ரயில்வே கடந்த வாரமே அறிவித்துவிட்டது.. பக்தர்களுக்காக பிரத்தியோக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
கௌரவ் ரயில்: இந்த கௌரவ் சுற்றுலா ரயிலை பொறுத்தவரை, இதில் 3 ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் கோச்சுகள், ஒரு பான்ட்ரி கார், இரண்டு பவர் கார்கள் என்று மொத்தம் 14 பெட்டிகள் இருக்கிறதாம்.. ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டலம் சார்பில், ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. ஆடி அமாவாசையன்று, கயாவில் தங்கள் முன்னோர்களுக்கு பிண்ட தானம் செய்யும் வகையில் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலா ரயில் நெல்லையில் இருந்து தொடங்கி மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி திரிவேணி சங்கமம், அலகாபாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே: இந்த சுற்றுலா பயணம் ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் கட்டணம் 21,800 முதல் 39,100 ரூபாய் வரை ஒரு நபருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 750 பேர் இதில் பயணம் செய்யக்கூடிய வசதியும் இந்த ரயிலில் உள்ளது. மேலும் ஒவ்வொரு ஊரிலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதியும், பயணிகளின் தேர்வுக்கு ஏற்ப உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications