கொங்குவில் தூண்டில்! அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமாகும் இரு சீனியர்கள்?.. எடப்பாடிக்கு ஷாக்
சென்னை: கோவை மாவட்டத்தில் அதிருப்தியில் உள்ள 2 அதிமுக சீனியர் தலைகள் இன்று திமுகவில் ஐக்கியமாக முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சொல்லிக் கொள்ளும்படியாக தலைவர்கள் யாரும் இல்லாததால் பல தொண்டர்கள் அரசியலிலிருந்து விலகியும் மாற்றுக் கட்சியில் இணைந்தும் தங்களது அதிருப்தியை வெளிகாட்டினர்.
மேலும் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்க விரும்பாமலும் பலர் விலகினர். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது, இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த இரட்டை தலைமைக்குள்ளே பிரச்சினை வெடித்து நீயா நானா சண்டை நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையையும் ஓபிஎஸ் கூட்டுத் தலைமையையும் விரும்புகிறார்கள். தற்போது அதிமுகவில் ஒருங்கிணைந்த நிலை இல்லாமல் சிதறி கிடக்கிறது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து விசுவாசிகளுக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் தொடர்ந்து இருக்க விரும்பும் தொண்டர்கள், ஓபிஎஸ் பக்கமும் எடப்பாடி பக்கமும் மாறி மாறி தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரங்கட்டப்பட்டவர்கள்
இவர்கள் இருவராலும் அதிருப்தியில் உள்ளவர்கள் , ஓரங்கட்டப்பட்டவர்கள் என மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அப்படி இணைந்தவர்தான் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இந்த நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து அதிமுக சீனியர் தலைகள் இருவர் திமுகவில் இன்று இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செ மா வேலுச்சாமி
செ மா வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஆகிய 2 பேர்தான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் கோவையில் நலத்திட்ட உதவிகளை தொடங்குவதற்காக சென்றுள்ளார். அவர் முன்னிலையில் இவர்கள் இருவரும் திமுகவில் இணைவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் மூவருமே கொங்கு மண்டலத்தினர். செ மா வேலுச்சாமி முன்னாள் எம்எல்ஏ ஆவார். 2001, 2006 ஆம் ஆண்டுகளில் பல்லடம் சட்டசபையிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கோவை மாநகராட்சியின் மேயராகவும் இருந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஆரம்ப காலத்தில் அதிக செல்வாக்குடன் இருந்தவர்.

வி.சி.ஆறுகுட்டி
வி.சி. ஆறுகுட்டி இ- இவர் முன்னாள் எம்எல்ஏ. 2011 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு ஆறுகுட்டி வென்றார். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் தாவினார். கொடநாடு வழக்கில் இவரிடமும் இவரது மகன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஆறுகுட்டிக்கு பிடி இறுகியதாகவும் தெரிகிறது. இவர்களில் வேலுச்சாமி கடந்த ஆண்டு முதலே திமுகவிற்கோ அமமுகவிற்கோ செல்லலாம் என அவரது பெயர் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications