சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 தொகுதியில் இடைத்தேர்தலா? .சட்டசபை தேர்தலில் வென்ற 2 அதிமுக 'எம்பிக்கள்'.. என்ன முடிவெடுப்பார்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளவர்கள். இவர்கள் இந்த முறை சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டனர். இதில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால் இவர்கள் ஏதாவது ஒரு பதவியைத்தான் வகிக்க முடியும். எனவே எந்த பதவியை வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறப்போவது உறுதியாகி உள்ளது. எம்பி தேர்தலா அல்லது எம்எல்ஏ தேர்தலா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

"திராவிடம்".. ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க போட்ட "கணக்கு".. அதிமுகவும் அழியலை.. பாஜகவும் வளரலை!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஸ்டாலின் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர் வைத்திலிங்கம்

ஆர் வைத்திலிங்கம்

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள், எம்பிக்களாகவும் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

இதில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகி இருப்பார்கள். இப்போது அதிமுக எதிர்க்கட்சியாகி உள்ளதனால் அதற்கு வாய்ப்பில்லை.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

எனவே கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி.க்களாக தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக வாய்ப்பு

அதிக வாய்ப்பு

இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையிலேயே புதிதாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அது அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பாதகமாகிவிடும். அதேநேரத்தில் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாய்ப்பு உள்ளது.

English summary
KP Munuswamy and R. vaithilingam are the Rajya Sabha MPs on behalf of aiadmk party. They contested the assembly elections this time. Both mps have been successful. But they can only hold a position of mp or mla. What will they decide?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X