நாளை & புதன்கிழமை இந்த 2 மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி.. உள்ளூர் விடுமுறை.. என்ன விவரம்?
சென்னை: நாளை (செவ்வாய் கிழமை), நாளை மறுநாள் (புதன் கிழமை) தமிழ்நாட்டில் உள்ள 2 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூர திருவிழாவையொட்டி, நாளை செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் விருதுநகர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும். அதேபோல, விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் அந்த மாவட்ட கலெக்டர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த ஆதிபராசக்தி அம்மா கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையிலும் கலந்து கொள்வார்கள்.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரத் திருவிழா என்பது மிகவும் விசேஷமானது. இந்த ஆடிப்பூரத் திருவிழா நாளை (ஆகஸ்ட் 6) நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் நாளை செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேசமயம், முக்கிய அரசு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளைய தினம் விடப்படும் உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் உள்ளூர் விடுமுறை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார். இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா கடந்த மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆடிப்பூர திருவிழா 12 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் 5 ஆம் நாள் திருவிழாவான ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று கருட சேவை நடைபெற்றது. ஆகஸ்ட் 5 ஆம் தேதியான இன்று சயன சேவை நடைபெறுகிறது. இந்த ஆடிப்பூரத் திருவிழாவின் சிகர நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம்: இந்த தேரோட்டத்தின்போது பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் காட்சியளிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆடிப்பூர தேர்த்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 17 சனிக்கிழமை, பணி நாளாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற புனித பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அறிவித்துத்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications