முதலில் மனைவிக்கு பொறுப்பு.. பிறகு சைலன்டா கட்சியில் சேர்ப்பு.. ரவுடிகள் விஷயத்தில் பாஜகவின் ரூட்?!
சென்னை: ரௌடிகள், சமூக விரோதிகளை தமிழ்நாடு பாஜகவில் சேர்ப்பதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது. அண்மையில் பாஜகவில் இணைந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரௌடிகளுக்கு பொறுப்பு வழங்குவதில் பாஜக ஒரு புது ரூட்டை கையாள்கிறதாம்.
படப்பை குணாவுக்கு முக்கிய பதவி: காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலை மற்றும் நிறுவன அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்வது, கொலை, கொள்ளை முயற்சிகளில் ஈடுபட்டது, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன.

படப்பை குணா மீது 48 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இதில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடக்கம். சென்னை புறநகரின் முக்கியமான சரித்திர பதிவேடு குற்றவாளியான (History sheeter) படப்பை குணாவை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார் படப்பை குணா.
பாஜகவில் ரௌடிகள்: பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த படப்பை குணா, பெரிய கேஸ் எதிலும் இன்வால்வ் ஆகாமல் இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதமே பாஜகவில் படப்பை குணா இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற, பாஜக கூட்டம் ஒன்றில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்ள படப்பை குணா அங்கு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அப்போது அவர் பாஜகவில் இணையவில்லை.
இந்நிலையில், தற்போது படப்பை குணாவுக்கு பாஜக முக்கிய பதவியை வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக படப்பை குணசேகரனை நியமித்து பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் வழிகாட்டுதலின்படியும், பாஜக மாநில செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி செல்வம் ஒப்புதலின்படியும் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்குன்றம் சூர்யா: சமீபத்தில் தான், 50க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா, பாஜக மாநில பட்டியலின அணி மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். மாநில தலைவர் அண்ணாமலை விரும்பினால் தேர்தலில் போட்டியிட தயார் எனக் குறி பரபரப்பைக் கிளப்பி இருந்தார் நெடுங்குன்றம் சூர்யா. இந்நிலையில், பிரபல ரவுடி படப்பை குணாவிற்கும் பாஜகவில் பதவி வழங்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரௌடிகள் என்பது தவிர இந்த இருவர் விஷயத்திலும் மேலும் ஒரு ஒற்றுமையும் உள்ளது. நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி மற்றும் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ஆகிய இருவருமே உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆவர்.
ஒற்றுமைகள்: நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி, நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். அவர் பதவியேற்றபோதே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர். அவர் பாஜக செங்கல்பட்டு மாவட்ட மகளிரணி தலைவியாகவும் உள்ளார். அவருக்கு அரசியலில் பக்கபலமாகச் செயல்பட்டு வந்த ரவுடி சூர்யாவுக்கு தற்போது மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகித்து வருகிறார். ஒன்றிய சேர்மன் பதவிக்கும் முயற்சி செய்த நிலையில், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மனைவி பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிலையில் தான், தற்போது கட்சியில் மாவட்ட நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் படப்பை குணா.
இதுதான் பாஜகவின் புது ரூட்டா?: தமிழ்நாடு பாஜகவில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் சேர்க்கப்பட்டு வருவது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாடு பாஜக தலைவராக எல்.முருகன் செயல்பட்டபோதே முக்கிய ரௌடிகள் பலர் பாஜகவில் இணைந்தனர். அப்போதே கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், படப்பை குணா, நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்டோர் தத்தம் மனைவியரை மட்டும் கட்சியில் சேர்த்து பொறுப்புகளைப் பெற்றனர்.
இப்போது, தாங்களே நேரடியாக கட்சியில் இணைந்து முக்கிய பதவிகளை பெற்றுள்ளனர். ரௌடிகளுக்கு அடைக்கலம் தரும் கட்சி என்ற விமர்சனத்தை தவிர்ப்பதற்காக, பெண்களை முதலில் கட்சியில் சேர்த்து, பிறகு சைலண்டாக ரௌடிகளை களமிறக்கி வருகிறது தமிழ்நாடு பாஜக என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications