"இதை" கவனிச்சீங்களா.. திடீர்னு மாறிய க்ளைமேட்.. திமுகவின் "வெள்ளை கொடி".. ஓ மோடியா?.. "2 பிக் சேஞ்ச்"
சென்னை: இன்றைய தினம் பிரதமர் மோடியின் சென்னை வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.. அந்தவகையில், 2 விதமான விஷயங்கள், பரவலான கவனத்தை பெற்று வருகின்றன.. என்ன அவை?
கடந்த அதிமுக ஆட்சியின்போது, மத்திய பாஜகவை அதிகம் விமர்சித்து வந்தது திமுக.. குறிப்பாக, ஒவ்வொரு முறையும், பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் திரண்டு சென்று, தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்தநேரத்தில்தான், கோ பேக் மோடி என்ற வாசகமும் இணையத்தில் ட்ரெண்டானது.. கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன் பறக்க விடுவது என எதிர்நடவடிக்கைகளில் இறங்கி, மத்திய அரசு மீதான தங்கள் கோபத்தை அதிர வெளிப்படுத்தி வந்தது திமுக.
அரியணை: ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் திமுக அரியணை ஏறியுள்ள நிலையில், நிலைப்பாட்டில் மாறுபாடு காணப்படுகிறது.. அதாவது, திமுக என்ற கட்சியின் நிலைப்பாடு அதே கொள்கைப்பிடிப்புடன் இருக்கிறது என்றாலும், மாநில அரசின் நிலைப்பாட்டில் மாறுபாடு காணப்படுகிறது.. கடந்த வருடம், திமுக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதி திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. அதில், "பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல.. நண்பர்தான். இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு "கெஸ்ட்".. அதனால், அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை" என்று கூறியிருந்தார்..
பிளாக் குடை: திமுகவின் இந்த நிலைப்பாட்டினை, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.. இதென்ன இரட்டை மனநிலைமை? இரட்டை வேஷம்? என்று சரமாரியாக சாடின.. அன்றைக்கு பறக்கவிட்ட கறுப்புக் கொடியை இன்று வெள்ளைக்கொடியாக்கி பறக்கவிட்டிருப்பதன் சூட்சமம்தான் என்ன? என்றும் கேள்விகளை எழுப்பின. இதே கேள்வியைதான் சீமானும் கேட்டு வருகிறார்.. "ஒரு குடையை உங்களால, கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்" என்பது, ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்" என்பதா??" என்று சீமான் கேள்வி எழுப்பியிருந்ததை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கவனிக்காமல் இல்லை.
கனிமொழி நச்: ஆனால், இதற்கான விளக்கத்தை சில மாதங்களுக்கு முன்பு, திமுக எம்பி கனிமொழி கூறியிருந்தார்.. "மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒரு போதும் ஆதரிக்காது.. மாநில திட்டங்களை தொடங்குவதற்காக தமிழகம் வரும் பிரதமரை வரவேற்பது நம் கடமை.. அரசியல் கருத்தியல் என்பது வேறு" என்று கனிமொழி தந்த விளக்கத்தையடுத்து, இந்த விவகாரம் அப்போது ஓரளவு முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இன்றைய தினம் பிரதமர் சென்னைக்கு வர உள்ளார்.. அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பிரதமரை சந்திக்க போகிறார்கள்..
வேல்முருகன் டென்ஷன்: பிரதமர் என்ற முறையில் திமுக அரசும் அவரை வரவேற்கும் சூழலில் உள்ளது. அந்தவகையில், மோடியின் வருகைக்கு அதிக அளவிலான எதிர்ப்புகள் காணப்படவில்லை. பிரதமர் வகையில், ஆளும் கட்சி தன்னுடைய கடமையை மிகச்சரியாக செய்து வருகிறது என்றாலும், ராகுல் காந்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அதிகமாகவே கொந்தளித்து காணப்படுகிறது.. நிலக்கரி சுரங்க விவகாரத்தில் வேல்முருகன் மிகவும் டென்ஷனாகி உள்ளார்.. எனவே, இவர்கள் 2 தரப்பில் மட்டுமே மோடி வருகைக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளதே தவிர, மற்ற கட்சிகள் யாருமே பெரிதாக கண்டனத்தை பதிவு செய்யவில்லை.
வணக்கம், வெல்கம்: அதனால்தானோ என்னவோ, இன்றைய தினம், வழக்கத்துக்கு மாறாக, '' வணக்கம் மோடி, வெல்கம் மோடி'' போன்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவது மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புகள் குறைந்து காணப்படுகிறது என்றால், இதற்கு பின்னணியில், பாஜகவின் ஐடி விங்கின் பங்களிப்பு அபரிமிதமாக உள்ளதையும் நாம் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டிஉள்ளது..

இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து பேச மொத்தம் 15 நிமிஷம்தான் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.. இந்த 15 நிமிஷத்தில், எவ்வளவு விஷயத்தை எடப்பாடி பழனிசாமி பேசப்போகிறார்? மொத்தத்தையும் இந்த 15 நிமிஷத்துக்குள் மோடியிடம் பேசிவிட முடியுமா? என்பது தெரியவில்லை.. ஆனால், ஓபிஎஸ்ஸுக்கு வெறும் 10 நிமிஷம்தான் பிரதமரை சந்திக்க டைம் தந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..
ஆக, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜகவால் தவிர்க்க முடியவில்லை என்பதுடன், ஓபிஎஸ்ஸைவிட எடப்பாடியின் "கை" ஓங்கியிருப்பதை பாஜக மேலிடமே நன்கு உணர்ந்துள்ளது என்பதும் இதன்மூலம் தெரியவருகிறது... எப்படி பார்த்தாலும், கடந்த காலங்களைவிட, இந்த முறை மோடியின் சென்னை வருகையானது, குறைவான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளதன் காரணம் என்னவோ???
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications