"விடமாட்டேன்".. சீறிய ஸ்டாலின்.. சட்டசபையில் 2 மேஜர் அறிக்கைகள்.. எடப்பாடி பழனிசாமிக்கு செக்?

சட்டசபை கூட்டத்தில் ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று 2வது நாளாக கூடவுள்ள நிலையில், திமுக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அதிமுக தரப்பில் யாரையெல்லாம் கட்டம் கட்ட போகிறது என்ற எதிர்பார்ப்புகள் கூடி வருகிறது..

உட்கட்சி பிரச்சனைகளே ஓராயிரம் சூழ்ந்திருக்கும் சூழலில், கட்சிக்கு வெளியே ஏகப்பட்ட விஷயத்தில் சிக்கி கொண்டுள்ளது அஇஅதிமுக.

அதிலும் எடப்பாடி & டீமுக்கு தலைக்கு மேல் ஏகப்பட்ட கத்திகள் தொங்கி கொண்டிருக்கின்றன.. ஒருபக்கம் ஜெ.மரண வழக்கு விசாரணை அறிக்கை, இன்னொரு பக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை, இதற்கு நடுவில் ஊழல் வழக்குகள், ரெய்டுகள், புகார்கள் என நாலாபக்கமும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.

 கமிஷன் + கமிஷன்

கமிஷன் + கமிஷன்


இவைகள் தொடர்பாக திமுக அரசு என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில், தமிழக சட்டசபை இன்று 2வது நாளாக மீண்டும் கூடுகிறது... இந்த கூட்டத்தில் ஆன் லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை தவிர, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் ஆகிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

 பயங்கர டென்ஷன்

பயங்கர டென்ஷன்

இந்த அறிக்கைகள் மீது சட்டவல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று அந்த கருத்துக்களுடன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சட்ட வல்லுநர்கள் என்ன கருத்து சொல்லியிருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள, ஆணைய அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அதிகாரிகளிடையே ஒருவித பதட்டம் இருந்து வருகிறதாம். இது ஒருபுறமிருக்க, அருணா ஜெகதீசன் ஆணையம், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் பலரையும் குற்றவாளியாக சுட்டிக்காட்டி அவர்களை தண்டிக்க வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

அதேபோல, ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில், சசிகலா, டாக்டர் சிவகுமார், விஜயபாஸ்கர், ராம்மோகன்ராவ் ஆகிய நால்வர் மீது சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அந்த அறிக்கையில் முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். இதனை யாரும் கேள்விக் கேட்க முடியாது. அந்த வகையில், ஆணையத்தின் அறிக்கையையும் சட்ட வல்லுநர்களின் கருத்தையும் ஏற்று திமுக அரசு என்ன செய்ய போகிறது என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

 செம்ம சஸ்பென்ஸ்

செம்ம சஸ்பென்ஸ்

இதனிடையே, கடந்த மாதம் கோவையில் பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மிகவும் சஸ்பென்ஸ் ஆகவே இருப்பதாக நாம் சொல்லவில்லை, அவரது கட்சியினரே சொல்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, அந்த அறிக்கையை என்னிடத்தில் ஆறுமுகசாமி கொடுத்தார்... அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதை நான் இப்போது சொல்ல மாட்டேன்... சட்டமன்றத்தில் நாங்கள் வெளிப்படையாக வைக்கிறோம்..

 ம்ஹூம்.. விடமாட்டேன்

ம்ஹூம்.. விடமாட்டேன்

எங்களுக்குள் வைத்து நாங்கள் முடிவு எடுக்கப் போவதில்லை. சட்டமன்றத்தில் அறிவித்து வெளிப்படையாக வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றி காட்டுவோம். அடுத்து தூத்துக்குடி சம்பவம்... இந்த சம்பவம் குறித்து கேட்டபோது அப்படியா என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பிறகு டிவி பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூறியவர். அந்த அறிக்கையும் தற்போது என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் சட்டமன்றத்தில் வைக்கப்படும்" என்று பேசினார் ஸ்டாலின்... இவ்வளவும் முதல்வர் ஆவேசத்துடன் கூறியிருந்த நிலையில், இன்று கூடவிருக்கும் சட்டசபை கூட்டத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த தமிழகம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+