Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்வநாசம்".. அமித்ஷாவின் 2 கேம்.. எடப்பாடிக்கு அசிங்கம், சம்மட்டி அடி.. அப்ப ஸ்டாலின் யாரு: விவாதம்

அமித்ஷா தெரிவித்த 2 பாயிண்ட்கள் குறித்து அலசல்கள் நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் சென்னை வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தும்போது, 2 முக்கிய விஷயங்களை பேசிவிட்டு போனதாக தெரிகிறது.. அதுகுறித்த அலசல்களும், விவாதங்களும் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன.

அமித்ஷா சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது, சில முக்கிய விஷயங்களை பாஜக நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் 2 மேஜர் பாயிண்ட்டுகளை அமித்ஷா சொன்னாராம்.. முதலாவதாக, கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பிந்தைய அரசியலில், ஒரு பெரிய வெற்றிடம் தமிழகத்தில் உருவாகி உள்ளது..

 2 பாயிண்ட்கள்

2 பாயிண்ட்கள்

பாஜகவினர் கடுமையாக உழைத்தால் அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம்... பாஜக அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினாராம். இரண்டாவதாக, திமுக குடும்ப அரசியலில் அழிந்து கொண்டிருக்கிறது.. அதிமுக, தானாகவே சிதைந்து கொண்டிருக்கிறது, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, நாம் வெற்றியை வென்றெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றும் அமித்ஷா பேசினாராம். வரும் 8ம் தேதிக்குபிறகு, மாநில தலைவர் அண்ணாமலையுடன் விரிவாக ஆலோசனை நடத்துவேன் என்று சொல்லிவிட்டு சென்றாலும்கூட, அமித்ஷா சொன்ன அந்த 2 பாயிண்ட்கள் மிகப்பெரிய அதிர்வலையை அதிமுக, திமுக என இரு தரப்பிலுமே ஏற்படுத்தி வருகிறது.

 வெற்றிடம்

வெற்றிடம்

அமித்ஷா வலியுறுத்திய அந்த 2 பாயிண்ட்கள் குறித்து, ஒரு தனியார் டிவிக்கு மூத்த பத்திரிகையாளர் மணி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் விரிவாக தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.. அதன் சுருக்கம் இதுதான்: "அமித்ஷா வெற்றிடம் என்று சொல்லி உள்ளதே, அபத்தமானது.. அப்படி ஒரு வெற்றிடமே இங்கு இல்லை.. கலைஞர், ஜெயலலிதா, இரு ஆளுமைகள் சென்றபிறகு, வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றால், ஸ்டாலின் எப்படி முதல்வராக வந்தார்? முதலில் வெற்றிடம் என்பதே கிடையாது, காரணம், வெற்றிடத்தை காற்று இட்டு நிரப்பும். நம்முடைய கொள்கைகளும், சித்தாந்தங்களும்தான் முக்கியமே ஒழிய தனிநபர்கள் முக்கியம் அல்ல.. தனிநபர்கள் வருவார்கள், போவார்கள்.. ஆனால், கட்சியும், கொள்கையும், அரசியலும் எப்படி உள்ளன, சித்தாந்த வழியில் கட்சியை நடத்துகிறோமா என்பதுதான் முக்கியம்..

 ரிப்பீட் எடப்பாடி

ரிப்பீட் எடப்பாடி

அப்படி பார்க்கும்போது, எடப்பாடி தன்னுடைய முழு ஆட்சியையும் செய்து முடித்திருக்கிறார்.. பிறகு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியும் வெற்றி பெற்றது.. எடப்பாடியும் 66 சீட் வாங்கினார்.. வலுவான எதிர்க்கட்சியாக இன்று உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பல துறையில் தமிழகம் வெற்றி நடை போட்டு கொண்டுதான் இருக்கிறது.. அரசியல் தலைவர்கள் என்றாலே மிகப்பெரிய ஆளுமைகளாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போல.. அதற்கு அவசியமில்லை.. வெற்றிடம் என்பதெல்லாம் வெற்றுக்கூச்சல். தமிழகத்தில் பாஜக வளர்வதற்கான சூழல் நிச்சயம் கூடியுள்ளது..

சர்வாதிகாரம்

சர்வாதிகாரம்

2021 தேர்தலுக்கு பிறகு, நல்லா இருந்த அதிமுகவை நாசம் பண்ணி, ஓபிஎஸ்ஸை வெளியே அனுப்பி, எல்லாம் தான் தான் என்று சொல்லி, சர்வாதிகார முறையில் கட்சியை நடத்திக்கொண்டு, சர்வாதிகார முறையில் அதிமுகவை அழிவுபாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடியின் அரசியலின் பின்புலத்தில் பார்த்தால், கண்டிப்பாக பாஜக வளர்வதற்கான நிலைமை உருவாகி உள்ளது.. ஒற்றை தலைமை விவகாரத்துக்கு பிறகு பார்த்தால், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக வளர்வதற்கான சூழல் இங்கு ஏற்பட்டுள்ளது.. அதுதான் அமித்ஷாவுக்கு இப்போது நம்பிக்கையை தந்துள்ளது.. அதனால்தான், குடும்ப அரசியலால் திமுக அழியும் என்றும், உட்கட்சி பூசலால் அதிமுக அழியும், அதிமுக சிதறுண்டு போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்..

வல்லூறுகள்

வல்லூறுகள்

மதவெறிகொண்ட ஒரு கூட்டம், இன்றைக்கு தமிழ்நாட்டையே கபளீகரம் செய்ய, துடித்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம், வல்லூறுகளாய் தமிழ்சமூகத்தை நாசம் செய்ய காத்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம், வளர்வதற்காக துடித்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம், ஒரு மதசார்பற்ற கட்சியை, அதுவும் 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சியை, 30 ஆண்டுகள் தமிழகத்தை மாபெரும் ஆண்ட கட்சியை, தன்னுடைய அற்ப உட்கட்சி சண்டையால் தன்னைத்தானே அழித்து கொண்டிருக்கிற சூழலில் மதவாத சக்திகள் தலைதூக்குவதை தவிர்க்க முடியாது.. இதைத்தான் இன்றைக்கு அமித்ஷா பேசியிருக்கிறார்.. இதை பார்த்தாவது, அதிமுக தலைவர்கள், தொண்டர்கள், தங்கள் பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும்..

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

இதுதான் விழித்துக் கொள்ளும் நேரம்.. தனியாக சென்றால், எடப்பாடிக்கு எதுவும் நடக்க போவதில்லை.. அப்படியே போனாலும், சசிகலாவுக்கு வந்த கதிதான் அவருக்கும் வரும்.. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை இவைகளை வைத்து எதிர்க்கட்சிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாஜக அரசு.. இந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான கேஸ்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது.. அன்று, 89 கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தலில் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் வைத்திருந்து செலவு செய்ததாக ஐடி + தேர்தல் ஆணையம் சேர்ந்து தந்த கேஸ் இன்னமும் நிலுவையில் இருக்கு..

 சர்வநாசம் கன்பார்ம்டு

சர்வநாசம் கன்பார்ம்டு

இதையெல்லாம் மனதில் வைத்தாவது, என்ன நடக்கும் என்று இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவுடன் பாஜக இணைந்தால், தமிழகத்துக்கு வரக்கூடிய பாதகம் என்பது குறைவு.. ஆனால், அதிமுக பலவீனமடைந்து, அங்கே பாஜக வளர்ந்தால் இந்த தமிழ்நாட்டுக்கு சர்வநாசம் நிச்சயம்.. தங்கள் நலன் கருதியோ அல்லது தமிழகத்தின் நலன்கருதியோ, அதிமுக நண்பர்கள் ஒன்றுசேர வேண்டும்.. 2026-ல் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று அமித்ஷா பேசியிருக்கிறார் என்றால், இது யாருக்கான சவால் என்பதை அதிமுக எண்ணிப்பார்கக் வேண்டும்..

 சம்மட்டி அடி

சம்மட்டி அடி

அமித்ஷா பேசியது அதிமுகவுக்கு விழுந்த சம்மட்டி அடி.. இன்னமும் கூட்டணியில் அதிமுக இருக்கிறது என்று தெரிந்தும்கூட, இப்படி சொல்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? அதிமுகவில் ஒன்றுபட்டால், பாஜகவை கட்டுக்குள் வைப்பது சாத்தியம்.. இல்லாவிட்டால் அதிமுகவுக்கே தேய்மானத்தில்தான் பாஜக வளரும். இது அதிமுகவுக்கும் நல்லதல்ல, தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல என்றார் மணி.. இதுபோலவே, சோஷியல் மீடியாவிலும், அதிமுக குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் குறித்தும், அதையொட்டிய பாஜகவின் வளர்ச்சி குறித்தும் விவாதங்களும், அலசல்களும் வட்டமடித்து வருகின்றன.. ஆக மொத்தம், அமித்ஷா எப்போது இங்கே வந்து போனாலும் சரி, அதன் அதிர்வுகள் மட்டும் லேசில் அடங்குவதில்லை..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+