பத்திரப்பதிவு.. சொத்து விற்பனையில் அதிரடி.. பட்டா பிரதி கேட்க தடை.. தமிழக அரசு அடுத்தடுத்து 2 உத்தரவு
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் தமிழக பதிவுத்துறை, 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.. நில அளவைத்துறை அதிகாரிகள் எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவில் மனைகளை கிரயம் பெறும்போது, ஒவ்வொருமனுதாரருக்கும் உட்பிரிவு செய்ய, தனித்தனியே மனு பெறும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு ஒரே மனைப் பிரிவில் உள்ள வீட்டு மனைகளை நிலஅளவை செய்து உட்பிரிவு செய்வதற்காக, நில அளவர் பல்வேறு நாட்களில் தனித்தனியே செல்லவேண்டியிருக்கிறது.

பட்டா மாறுதல்: இதனால், உட்பிரிவு பட்டா மாறுதல் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவேதான், தமிழ் நிலம் என்ற இணையதள வசதியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார்.. இந்த புதிய மென்பொருள் மூலமாக, மனைப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உட்பிரிவு செய்து, அவற்றின் உரிமையாளர் பெயரில் பதிவு செய்யப்படுவதால், பின்னாளில் மனைகளை உட்பிரிவு செய்யக் கோரி தனித்தனியாக மனுக்கள் வரப்பெறுவது தவிர்க்கப்படும்.
அதுமட்டுமல்ல, கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன.. இந்த 'தமிழ் நிலம்' சாப்ட்வேர் வாயிலாக பட்டா பிரதிகள், ஆன்லைன் முறைக்கும் மாற்றப்பட்டிருக்கின்றன.
சார் பதிவாளர்கள்: எனினும், அட்டெஸ்டேஷன் என்று சொல்லப்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு, சார் - பதிவாளர்கள் வலியுறுத்துவதால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்குவதற்காகவும் அலைய வேண்டியுள்ளது. பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைலேயே எளிய முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வரச் சொல்வது தேவையில்லாத ஒன்றாகவும் கருதப்படுகிறது.
அதனால்தான், பதிவுத்துறைக்கு நில அளவைத் துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள். பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் உள்ளதாவது:
காகித பிரதிகள்: "பத்திரங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும்போது, பட்டா, சிட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றின் காகிதப் பிரதிகளை கேட்க வேண்டாம். இந்த சொத்துக்களின் சர்வே எண்ணை பயன்படுத்தி, வருவாய்த் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் பட்டா விபரங்களை, சார் - பதிவாளர்களே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் காகிதப் பிரதி கேட்டு, பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, பதிவுத்துறை இன்னொரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதில், "ஆதார் ஆணைய பரிந்துரையின்படி, எல்.ஓ., எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் தற்போது பயன்படுத்தப்படுகிறது. இதன் பயன்பாட்டை, செப்டம்பர் 30ல் நிறுத்தப் போவதாக, ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக, 'எல்1' என்ற புதிய விரல் ரேகை பதிவு கருவிகளை, அக்., 1 முதல் பயன்படுத்த, ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் கார்டு: இதன்படி, எல்காட் மின்னணு கழகம் வாயிலாக, புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 'ஸ்டார் 2.0' மென்பொருளில், இந்த புதிய கருவியை இணைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதில், 'எல்1' கருவியில் விரல் ரேகை விபரங்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை. ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும், எல்.ஓ., கருவியையும் சேர்த்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அக்., 1 முதல் இந்த இரண்டு கருவிகளிலும் விரல் ரேகை பதிவு செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சொத்து பத்திரம் பதிவுக்கு வரும் போது, விற்பவரின் கைரேகை, அதன் முந்தைய பதிவின் போது பெறபட்டதுடன் ஒத்துப்போக வேண்டும். இதற்காகவே புதிய வசதி, "ஸ்டார் 2.0" மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய பதிவுடன், விற்பவரின் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே, புதிய பதிவு மேற்கொள்ளப்படும். இதில், வேறுபாடு இருந்தால், தற்போது தாக்கல் செய்யப்படும் பத்திரம் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications