அரக்கோணம் போன மேஜர் செய்தி.. கும்மிடிப்பூண்டிக்கும் பறந்த தகவல்.. இனி எல்லாமே மாற போகுது.. பாருங்க
சென்னை: சென்னை ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதுகுறித்த அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.. என்ன காரணம்?
சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை ஆகிய 4 வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அட்டவணை: பயணிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த ரெயில்களின் சேவையும் மாற்றி அமைக்கப்பட்டும் வருகின்றன.. இந்த கால நேர மாற்றத்தை அட்டவணையாகவும் வெளியிட்டு வருகின்றன..
ஆனால் இந்த முறை மின்சார ரெயில்களின் சேவை குறைத்து அட்டவணை வெளியிட்டுள்ளது.. மொத்தமுள்ள 4 வழித்தடங்களிலும் சேவைகள் லேசாக குறைக்கப்பட்டுள்ளது.. அத்துடன் இந்த கால மாற்றம், இன்றைய தினமே நடைமுறைக்கும் வந்துள்ளது.
மின்சார சேவை: அதாவது, கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வரை இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையின் எண்ணிக்கை 124 ஆக இருந்த நிலையில் இப்போது 8 சேவை குறைக்கப்பட்டு, 116 சேவை செயல்பட்டிற்கு வந்தது. அந்த புதிய அட்டவணை இதுதான்:
கடற்கரை நிலையத்தில் அதிகாலை 3.55 மணி முதல் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில் தாம்பரத்திற்கு அதிகாலை 4.50 மணிக்கு செல்கிறது. இரவு 11.59 மணிக்கு கடைசி சேவையாக புறப்படும் மின்சார ரெயில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12.54 மணிக்கு செல்கிறது. இதே போல செங்கல்பட்டில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடற்கரைக்கு நள்ளிரவு 12.54 மணிக்கு வந்து சேருகிறது. கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரெயில் சேவையும் 9 குறைக்கப்பட்டுள்ளன.
வேளச்சேரி: இதுவரையில் 70 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 61 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. முன்பு இந்த சேவை 80 ஆக இருந்தது. கடந்த ஆண்டு 70 ஆக குறைக்கப்பட்டது. அதிகாலை 4.10 மணிக்கு கடற்கரை நிலையத்தில் இருந்து முதல் சேவை தொடங்குகிறது. 4.55 மணிக்கு வேளச்சேரி சென்றடைகிறது. வேளச்சேரியில் இருந்து அதிகாலை 5.05 மணிக்கு புறப்படும் ரெயில் 5.50 மணிக்கு கடற்கரை வந்து சேரும்.
இரவு 10.20 மணிக்கு கடைசி சேவையாக கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் வேளச்சேரிக்கு இரவு 11.05 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 11.35 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேரும். காலை மற்றும் மாலை பீக் அவர்ஸ் நேரத்தில் 10 நிமிடத்திற்கு வீதம் ஒரு பறக்கும் ரெயில் இயக்கப்படுகிறது. சாதாரண நேரத்தில் 20 நிமிடத்திற்கு ஒரு ரெயில் சேவை உள்ளது.
பட்டாபிராம்: மூர் மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் 128 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 124 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு முதல் சேவை ஆவடிக்கு தொடங்குகிறது. இந்த ரெயில் நள்ளிரவு 1.05 மணிக்கு ஆவடியை சென்றடைகிறது. அதே போல பட்டாபிராமில் இருந்து அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 4.25 மணிக்கு வந்து சேரும்.
இரவு 11.45 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் ஆவடிக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு செல்லும். இதுவே கடைசி சேவையாகும். இதே போல திருத்தணியில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் நள்ளிரவு 12.20 மணிக்கு மூர் மார்க்கெட் வந்து சேரும். கடற்கரையில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு புறப்படும் முதல் ரெயில் காலை 6.25 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும். கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரெயில் மூர் மார்க்கெட்டுக்கு அதிகாலை 5.20 மணிக்கு வந்து சேரும்.
ரயில் சேவைகள்: இரவு 11.20 மணிக்கு மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்படும் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு கும்மிடிப்பூண்டி சென்றடையும். இரவு 9.40 மணிக்கு சூலூர்பேட்டையில் இருந்து புறப்படும் ரெயில் மூர்மார்க்கெட்டுக்கு 11.45 மணிக்கு வந்து சேரும். கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 47 சேவைகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய அட்டவணைப்படி மொத்தம் 620 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. முன்பு இருந்ததை விட சேவை சற்று முன்னதாக தொடங்கப்பட்டுள்ளது. கடைசி சேவை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications