சிபில் ஸ்கோர் விதிகளில்.. 2 பெரிய மாற்றம்.. பர்சனல் லோன், வீட்டு லோன் எடுக்க போறீங்களா? கவனம்
சென்னை: வங்கிகளில் முதல்முறை கடன் வாங்குபவர்களுக்கு வங்கிக்கடன்கள் வழங்க குறைந்தபட்ச சிபில் மதிப்பெண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் மதிப்பெண்ணை கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்தது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நித்திரை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கிகள் ஒருவரின் கடன் விண்ணப்பத்தை, சிபில் மதிப்பெண் குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருந்தால் நிராகரிக்க கூடாது.. அவர் ஏற்கனவே கடன் வாங்கியவராக இருந்தால் நிராகரிக்கலாம்.. ஆனால் இதுவரை கடன் வாங்காதவர் என்றால் கடன் கொடுக்க வேண்டும்" என சௌத்ரி கூறினார். ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டை அவர் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தினார்.

சிபில் மதிப்பெண் - வங்கி கடன்
சிபில் மதிப்பெண் என்பது மூன்று இலக்க எண். இது 300 முதல் 900 வரை இருக்கும். தனிநபரின் கடன் தகுதியை இம் மதிப்பெண் சுருக்கிக் காட்டும். இந்திய கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட் (CIBIL) இதனை வழங்குகிறது. தனிநபர், தங்கம், வீடு, பிற வங்கிக் கடன்களுக்கும் தகுதியை தீர்மானிக்க இது பயன்படும்.
சிபில் மதிப்பெண் தொடர்பான விதிகள்
முதல்முறை கடன் வாங்குபவர்களின் விண்ணப்பங்கள், அவர்களுக்கு கடன் வரலாறு இல்லை என்பதற்காக மட்டும் நிராகரிக்கப்படக்கூடாது என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. நாடு முழுக்க தங்களின் சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் புகார் வைக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக பர்சனல் லோன் வாங்க போன பலரும் தங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதாக வைக்கின்றனர். இதற்கு பின் முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
கிரெடிட் ஸ்கோரில் செய்யப்பட்ட சில மாற்றங்களே இதற்கு காரணம். ஆர்பிஐ சார்பாக சிபில் ஸ்கோரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வங்கிகள் உங்களின் சிபில் ஸ்கோரில் கூடுதல் சிரத்தையுடன் இனி செயல்படும். அதாவது முன்பு போல எளிதாக லோன் பெற முடியாது.
மேலும் கிரெடிட் ஸ்கோர் ஒவ்வொரு மாதமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்பதால் பலருக்கும் கிரெடிட் ஸ்கோர் யோசிக்க முடியாத காரணங்களுக்காக சரிந்து உள்ளது.
ஆர்பிஐ விதிகள்
புதிய தனிநபர் கடன் விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனி நபர் கடன் வாங்குவதை.. அதாவது பர்சனல் லோன் எடுப்பதை இந்த நடவடிக்கை கடினமாக்குகிறது. ஜனவரி 1, 2025 முதல், வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கைகளை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
சிபில் ஸ்கோர்
முன்பெல்லாம் லோன் வாங்க விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் கடந்த மாதம் உங்களின் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்றே பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 2 வாரங்களுக்கு முன் உங்கள் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்று பார்க்க தொடங்கி உள்ளனர். ஆர்பிஐ புதிய விதி ஏற்கனவே வங்கிகளில் அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகள் சிறிய தவறுகளை செய்தால் கூட அதனால் உங்களுக்கு லோன் கிடைக்காமல் போகலாம். அதாவது இனி நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள், பிழைகள் கூட உங்களுக்கு லோன் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும்.
ஏன் முக்கியம்?
இதன் மூலம் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் நிதிநிலையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்யலாம். அதாவது துல்லியமாக சிபில் ஸ்கோரை கணக்கிட முடியும். இந்த நடவடிக்கையானது அதிக அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் வாங்குபவர்கள் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்கும். மாத தொடக்கத்தில் ஏதாவது தவறு செய்தால் அது அடுத்த மாதம் உள்ள சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கலாம்.. 2 வாரங்களிலேயே பிரதிபலிக்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications