100 கோடியாமே.. சட்டென ஓபிஎஸ் எடுத்த முடிவு.. துணை நிற்கும் "சக்தி".. ஆட்டம் ஆரம்பம் போல
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2 முக்கிய அஸ்திரங்களை ஓபிஎஸ் எடுத்துள்ளார்
சென்னை: அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2 முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமியை சுற்றி நிறைய சிக்கல்கள் கூடிவரும் நிலையில், ஓபிஎஸ் இப்போது முன்பு போல் இல்லை.. செம கூலாக இருக்கிறார்.. கடந்த 15 நாட்களாகவே உற்சாகத்துடனும், குஷியுடனும் வலம் வருகிறார்..
பறந்து பறந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.. ஏகப்பட்ட பிளான்களை கையில் வைத்திருக்கிறார்.. ஆதரவாளர்களை, நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசிவருகிறார்.

டிடிவி + ஓபிஎஸ்
இத்தனை நாளும் மென்று விழுங்கிக் கொண்டு, மறைமுமாக ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில், இன்று வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்துவிட்டார்.. அந்த பக்கம் இருந்தும் தினமும் ஏதாவது ஒரு வகையில் சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், 2 தகவல்கள் அதிமுகவுக்குள் கசிந்து வருகிறது.. முதலாவதாக, அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.. இதற்காக, இருவருமே ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாராளங்கள்
இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. இதற்கு முன்புவரை ஓபிஎஸ் தரப்பில் இப்படிப்பட்ட பணவிவகாரம் என்பது எழாமலேயே இருந்தது.. யாருக்குமே ஓபிஎஸ் செலவு செய்வதில்லை என்றும், அதனாலேயே ஓபிஎஸ் பக்கம் இருந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்க கூடுதலான சில தாராளங்களை எடப்பாடி வழங்கியதால்தான், 90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

செல்லூரார்
இந்த டெக்னிக்கைதான், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் இணைந்து எடுத்துள்ளனராம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடனும் பேச்சுவார்த்தையில் சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் இறங்கினர். அவரும் ஓபிஎஸ் பக்கம் வர கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ், சசிகலாவிடம் பேச்சுவார்த்தையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

தேவர் ஜெயந்தி
இரண்டாவதாக, இந்த ஒரே மாதத்தில், ஓபிஎஸ் மீதான செல்வாக்கு, தென் மண்டலங்களில் கூடிவிட்டநிலையில், விரைவில் ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும் தென்மண்டலத்தில் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளதாம். அநேகமாக, வரும் தேவர் ஜெயந்திக்குள் இவர்கள் சந்திப்பு இருக்கலாம் என்கிறார்கள். அதேபோல, எடப்பாடி இதுவரை சம்மதம் தெரிவிக்காத நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

"வைட்டமின் + ப"
ஏற்கனவே கடந்த ஒரு மாதமாகவே, போட்டி பொதுக்குழுவை நடத்த முடியாமல், திணறி வந்தார் ஓபிஎஸ்.. பொறுப்பாளர்களை மாவட்ட வாரியாக நியமித்தும், பலத்தை காட்ட போதுமான ஆதரவாளர்கள் இல்லாததாலும், "வைட்டமின் ப" செலவு செய்ய முயலாததாலும், இந்த பொதுக்குழு தள்ளிப்போய் கொண்டே இருந்ததாக சொல்லப்பட்டது.. இப்போது சசிகலா மறைமுகமாக களத்தில் இறங்கி உள்ளதால், ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் வருவது அதிகரித்துள்ளதுடன், பொதுக்குழுவும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications