+2 ரிசல்ட்.. முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்டம்.. 2ம் இடம் எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அளவில் அதிக அளவில் தேர்வு பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்திற்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி முதல் தமிழக பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகளே இன்று வெளியானது. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் விகிதத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர்
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்கள் 4.54 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் .
மாணவர்கள் 3.57 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
எப்படி +2 ரிசல்ட் பார்ப்பது
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க விரும்பும் மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் பல மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம். தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் பார்த்து பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து தளங்களுக்கும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
dge.tn.gov.in
tnresults.nic.in
apply1.tndge.org/dge-result-list
tn gov 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: எப்படி உள்நுழைவது
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் TN 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க, மாணவர்கள் சில முக்கியமான உள்நுழைவு விவரங்களை உள்ளிட வேண்டும். இந்த விவரங்கள் அவர்களின் அட்மிட் கார்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரோல் எண்
பிறந்த தேதி
TNDGE HSC பிளஸ் டூ தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கான வழிமுறைகள்:
மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து TN 12வது தேர்வு முடிவுகளை எளிதாக சரிபார்த்து பதிவிறக்கம் செய்வது எப்படி என்று இங்கே விளக்கப்பட்டு உள்ளது.
படி 1: அதிகாரப்பூர்வ TN அரசின் ரிசல்ட் வலைத்தளங்களுக்குச் செல்லவும் - tnresults.nic.in அல்லது dge.tn.gov.in
படி 2: "TN 12வது தேர்வு முடிவுகள் 2025" என்று கூறும் இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: கொடுக்கப்பட்ட பக்கத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும், உங்கள் பிறந்த தேதியை பின்னர் குறிப்பிடவும்.
படி 4: உங்கள் TN 12வது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
படி 5: உங்கள் மதிப்பெண் முடிவை பதிவிறக்கி கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications