• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சில்மிஷ சேட்டை.. வாய்க்குள்ள "ஸ்பிரே" அடித்து தேம்பி தேம்பி அழுதாரே தாளாளர்.. இப்ப மாமியார் வீட்டில்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த தாளாளர் வினோத்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் இபி காலனியில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியின் தாளாளரின் பெயர் வினோத்.. 34 வயதாகிறது.. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை தந்ததாக தெரிகிறது.

 கிட்ட கிட்ட நெருங்கி டார்ச்சர்.. கதறிய பெண்கள்.. வாய்க்குள் கொசுமருந்து ஸ்பிரே.. தாளாளர் லைவ் வீடியோ கிட்ட கிட்ட நெருங்கி டார்ச்சர்.. கதறிய பெண்கள்.. வாய்க்குள் கொசுமருந்து ஸ்பிரே.. தாளாளர் லைவ் வீடியோ

 கவுன்சிலிங்

கவுன்சிலிங்

குறிப்பாக, பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் என்ற பெயரிலும், ஸ்பெஷல் கிளாஸ் தொடர்பாக பேச வேண்டும் என்றும், அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தாராம்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.. பெற்றோரும் பள்ளி நிர்வாகத்திடம் இதை பற்றி புகார் கூறியுள்ளனர்.. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள்.. இது வினோத்துக்கு இன்னும் சாதகமாகிவிட்டது.

டார்ச்சர்

டார்ச்சர்

இதன்காரணமாக, பாலியல் தொல்லையை அளவுக்கு மீறி தர ஆரம்பித்துவிட்டார்.. ஒருகட்டத்தில் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த பெற்றோர்கள், மாணவ - மாணவிகள் 500க்கும் மேற்பட்டோருடன், நேற்று முன்தினம் காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்... அந்த பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட முயன்றனர்... வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று சொல்லி, பள்ளிக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த தகவலறிந்து தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தாசில்தார் வெங்கடேசன், போன்றோர் திரண்டு வந்தனர்.

 லீவு 3 நாள்

லீவு 3 நாள்

பெற்றோர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்... வினோத் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி தரவும், அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்... உடனடியாக பள்ளிக்கு 3 நாட்கள் லீவும் அறிவிக்கப்பட்டது... அதாவது வரும் திங்கட்கிழமைதான் பள்ளி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.. இதையடுத்து, வினோத் மீது திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய முயன்றனர்.. ஆனால், வினோத்தை காணவில்லை.. தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை தேட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

 ரகசிய தகவல்

ரகசிய தகவல்

இந்நிலையில், தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில், வினோத் திடீரென ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அதில் கதறி கதறி அழுது, மனமுடைந்து பேசினார்.. அழுதுக்கொண்டே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.. கொசு மருந்து ஸ்பிரேவை எடுத்து வாய்க்குள் அடித்து கொண்டே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட அந்த வீடியோ, அனைவரையும் பதைபதைக்க வைத்தது.. தன் மீது எந்த தவறும் இல்லை, வேண்டுமென்றே பழியை சொல்வதாக அந்த வீடியோவில் அழுது கொண்டே சொன்னார் வினோத்.

டீச்சர்கள்

டீச்சர்கள்

"சரி, நான் போகிறேன். கண்டிப்பா பிழைக்க மாட்டேன். அனுதாபம் எல்லாம் கிடையாது...நான் எந்த தவறும் செய்யவில்லை. இது மாணவ-மாணவிகளுக்கு தெரியும்" என்று சொல்லி, சில மாணவிகளின் பெயர்களையும், டீச்சர்களின் பெயர்களையும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். இந்த வீடியோ ஆதார அடிப்படையில், வினோத் கோவாவில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.. இதையடுத்து, அவரை பிடிக்க தனிப்படையும் கோவா விரைந்த நிலையில், கடைசியில் அவரது இருப்பிடத்தையும் அறிந்து வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஸ்ப்ரே

ஸ்ப்ரே

இவர் எங்கிருக்கிறார் என்று போலீசார் தேடி வந்த நிலையில், இவர் கோவாவில் இருப்பதாக ஒரு ரகசிய தகவல் போலீசாருக்கு தெரியவந்தது.. எனவே, கோவாவுக்கு போலீசார் விரைந்த நிலையில்தான், வினோத் அந்த தற்கொலை வீடியோவை பதிவிட்டார்.. அதற்கு பிறகு, அவர் கோவாவில்தான் இருக்கிறார் என்பது வீடியோ அடிப்படையில் உறுதியானது.. கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவரை தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்... பாலியல் குற்றச்சாட்டில் கைதான பள்ளி தாளாளர் வினோத்துக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
+2 students sexually harassed and absconding private school principal arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X