20 அடி ஆழத்தில்.. சென்னை அம்பத்தூர் ரோட்டில் திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளம்.. வாகன ஓட்டிகள் ஷாக்
சென்னை: சென்னை அம்பத்தூர் கருக் சாலையில் 20 அடி ஆழத்திற்கு திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் மண்டலத்திற்கு 82-வது வார்டுக்கு உள்பட்ட மேனாம்பேடு - கருக் பிரதான சாலையில் இன்று அதிகாலை ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சுமார் 20 அடி ஆழத்திற்கு சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை வேளையில் இந்த பள்ளம் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக விபத்துக்களும் தவிர்க்கப்பட்டது.

இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்த போது சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தை பார்த்துள்ளனர். உடனடியாக சாலையில் தடுப்புகள் அமைத்து பள்ளம் அருகே யாரும் செல்லாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தொடர்ந்து சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் பள்ளம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
முழு வீச்சில் பணி: இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் பள்ளம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பள்ளத்தை சீர் செய்யும் பணியையும் முடுக்கி விட்டுள்ளனர். இந்த சாலையை ஒட்டி செல்லக் கூடிய பாதாள சாக்கடை சேதம் அடைந்த காரணத்தால் இந்த ராட்சத பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் செல்வதற்கு வாகன ஓட்டிகள் இந்த சாலையைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால், பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக் கூடும் என்பதால் முழு வீச்சில் சாலையை சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அம்பத்தூரில் உள்ள கொரட்டூர் பிரதான சாலையில் கடந்த வாரம் இதேபோன்று திடீரென பள்ளம் ஏற்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்: இதில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் பள்ளத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் அதிகனமழை பெய்ததால் பல இடங்களில் மழை நீர் வடிகால்களும் சேதம் அடைந்தன. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் உரிய ஆய்வை மேற்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications