சென்னை விமான நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு.. தவித்த பயணிகள்.. தாமதமாக கிளம்பிய விமானங்கள்
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் . துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு 187 பயணிகளுடன் காலை 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் விமானி வராத காரணத்தால் இரண்டரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட நேர்ந்தது. பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். குவைத்தில் இருந்து வந்த விமானத்தை இயக்கி வந்த விமானி ஓய்வுக்கு சென்று விட்டார்.
விமானத்தை இயக்க வேண்டிய தலைமை விமானி சென்னை விமான நிலையத்துக்கு வரவில்லை. இதனால் குவைத் விமானத்தில் பயணிகள் ஏற்றப்படாமல் அமர வைக்கப்பட்டனர். விமானி காலதாமதமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். இதனால் இரண்டரை மணிநேரம் தாமதமாக அந்த விமானம் குவைத்துக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications