கமல் போட்டியிடும் தொகுதி இங்குதானாமே.. என்ன காரணம்? கலக்கத்தில் திமுக... பரபர தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மக்கள் நீதி மய்ய கட்சி வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கமாக இருக்கும் வேளச்சேரியில் இருந்து போட்டியிடுமாறு மூத்த தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வேளச்சேரி தொகுதி கமலுக்கு பெஸ்ட் சாய்ஸ் என்கிறார்கள். இது தொடர்பாக கமலிடம் கட்சித் தலைவர்கள் திட்டத்தை முன்வைத்துள்ளனர். ஆனால் இறுதி முடிவு அவரே எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாத கமல்ஹாசன், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின் போது நிச்சயம் போட்டியிடுவேன் என்று கடந்த திங்கள்கிழமை அறிவித்திருந்தார். இருப்பினும், அந்தத் தொகுதியின் பெயரை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்கள்

தொகுதி மறுசீரமைப்பு திட்டப்படி 2011 இல் உருவான வந்த வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். இதுதவிர வேளச்சேரி தொகுதியின் ஒரு சில பகுதிகளில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். கமல்ஹாசனின் கொள்கைகளும் அவரது கவர்ச்சிக்கும் இந்த தொகுதியில் வரவேற்பு இருக்கலாம் என்கிறார்கள்.

எங்கு அதிகம்

எங்கு அதிகம்

2019 லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு கணிசமான எண்ணிக்கையில் வாக்களித்தவர்கள் நகர்ப்புற வாக்காளர்கள் ஆவர். சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), ஸ்ரீபெரும்புதூர், மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலா ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளது.

மொத்த வாக்குகள்

மொத்த வாக்குகள்

சென்னை (தெற்கு) கீழ் வரும் வேளச்சேரியில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர்.ராங்கராஜன் 23,099 வாக்குகளைப் பெற்றார். மொத்தத்தில், மக்கள் நீதி மய்யம் 2019 இல் அறிமுகமாகி தேர்தலை சந்தித்த நிலையில் மொத்தம் 15.76 லட்சம் வாக்குகளைப் பெற்று(3.72%) பெற்று அசத்தி இருந்தது.

நம்பிக்கை அதிகம்

நம்பிக்கை அதிகம்

மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தினர் இதுபற்றி கூறுகையில். " எங்கள் கட்சி மற்றும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நகர்ப்புற தொகுதியில் இருந்து போட்டிகளை எதிர்கொள்வது சரியாக இருக்கும். இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்காளர்கள் மற்றவர்களை விட ஒரு மாற்றம் மற்றும் புத்துணர்ச்சிக்காக ஏங்குகிறார்கள். வேளச்சேரி பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான வீடுகள் உள்ள பகுதி, கமல்ஹாசன் அங்கிருந்து போட்டியிட்டால் அவர்கள் மீதான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தக்கூடும்" என்றார்கள்.

திமுக தொகுதி

திமுக தொகுதி

வேளச்சேரி பலத்த மழை பெய்யும் போது பல இடங்கள் தண்ணீர் தேங்குகிறது அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. அடையாறு, திருவன்மியூர், பெசன்ட் நகர் மற்றும் சாஸ்திரி நகர் போன்ற பல உயர்மட்ட வசதியான, நடுத்தர வர்க்க மற்றும் உயர் நடுத்தர வர்க்க வாக்காளர்களைக் கொண்ட தொகுதிதான் வேளச்சேரியாகும். இது திமுகவின் தொகுதியாகும். திமுகவின் ‘வாகை' சந்திரசேகர் வேளச்சேரி எம்எல்ஏவாக உள்ளார். கமல் போட்டியிட உள்ளதால் திமுக கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பரமக்குடி

பரமக்குடி

மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடப் போவதாக அண்மையில் தகவல்கள் பரவியது. இன்னும் மய்யம் அதை உறுதிப்படுத்தவில்லை. இப்ப வேளச்சேரியை சொல்கிறார்கள். இதற்கு நடுவில் பரமக்குடி மற்றும் மதுரையும் அடிபடுகிறது. மண்ணின் மைந்தன் என்று சென்டிமெண்ட் காரணமாக பரமக்குடி பெயரை சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+