"ஈரக்குலையே" நடுங்கி போச்சு.. கர்ப்பம் வேற.. "வெறி" பிடித்த மிருகம் யார்? பறிபோன உயிர்.. பதறிய மதுரை
: சர்வதேச நாய்கள் தினத்தன்று மதுரையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது
சென்னை: சர்வதேச நாய்கள் தினம் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மதுரை மக்கள் மட்டும் அதிர்ந்து போயுள்ளனர்.. என்ன காரணம்?
மனிதர்களின் செல்ல பிராணிகளில் முதன்மையானவையாக நாய்கள் உள்ளன.. பலரின் குடும்பத்தில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வருபவை இந்த நாய்கள்தான்.
எத்தனையா குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, நாய்கள் மகிழ்ச்சியாக மாற்றுகின்றன.,. பலமடங்கு புத்துணர்ச்சியை வாரி வழங்குகின்றன.. நம்மிடம் நாய்கள் காட்டும் பாசமும், அன்பும், விசுவாசமும் எந்தவித நிபந்தனையுமற்றது..

சிதறுண்டு போனார்கள்
நாய்களுக்கும் உணர்வுகள் உண்டு.. கோபம், மகிழ்ச்சி, வருத்தம், ஏமாற்றம், வெறித்தனம், என அத்தனை உணர்வுகளும் நாய்களுக்கும் உண்டு.. தன்னை வளர்க்கும் ஓனர்கள் மீதுகூட இந்த நாய்கள் கோபப்பட்டுக் கொள்ளும்.. ஆனா, அடுத்த நிமிடமே, உற்சாகமாகத்தில் ஓடிவந்து காலைத்தூக்கி கொண்டு நின்று நேசத்தை கொட்டிச்செல்லும்... இந்த அன்பில் கரைந்து காணாமல் போனவர்கள் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கிறார்கள்.

ஹைப்ரீட்
மனிதர்களின் சிறந்த நண்பர்களில் இந்த நாய்களும் அடக்கம் என்பதை மறுக்க முடியாது.. நாய்களுக்கும் - மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் ஆழமான பாசத்தை போற்றும் வகையில்தான், சர்வதேச நாய் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது... அந்தவகையில் இன்று நாய்கள் தினம் கொண்டாடப்படுகிறது.. இதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது... அதாவது, உயர்தர ஹை ப்ரீட் நாய்களை பணம் கொடுத்து வாங்கி, வீடுகளில் வளர்ப்பதை விட, ஆதரவற்று இருக்கும் நாய்களையும் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான், சர்வதேச நாய்கள் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

தெரு, பள்ளிகள்
இனம், அளவு, பாலினம் அல்லது வயது இப்படி எதையுமே பொருட்படுத்தாமல், அனைத்து வகையான நாய்களின் நலனை மட்டும உறுதி செய்வதும் இந்தநாளின் மிக முக்கிய நோக்கம்.. அதனால்தான், தெருக்கள், பள்ளிகள், குடிசைப்பகுதிகள், என எங்கெல்லாம் நாய்கள் அல்லது விலங்குகள் துன்பத்தில் இருப்பதை கண்டால், உடனே என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தனிநபர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கையாகவே விடுத்து வருகிறார்கள்.

தெரு நாய்கள்
இப்படி நாய்கள் அடிபட்டதாலே அதற்கு முன்னுரிமை தந்து சிகிச்சை தர வேண்டும், நாய்களை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு அதிர்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.. அதுவும் இன்றைய தினமே நடந்துள்ளதுதான் உச்சக்கட்ட சோகத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது.. மதுரை டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே 2 தெரு நாய்கள் சண்டை போட்டுள்ளன.. இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த 3 பேர், இந்த நாய்கள் தொல்லை தாங்காமல் பெரிய கட்டைகளை தேடி எடுத்து வந்துள்ளனர்.

கன்ட்ரோல் ரூம்
அதில் ஒரு நாயின் மீது 3 பேரும் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளனர்.. 3 பேருமே ஒரே சமயத்தில் தாக்கியதால், நாய் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்துவிட்டது.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, விலங்கு நல ஆர்வலர்கள் பதறிப்போய் ஓடிவந்தனர்.. பிறகு, சாய் டிரஸ்ட் நிறுவனர் மயூர் ஹசிஜாவுக்கு இதை பற்றி தகவல் தெரிவித்தனர்.. அவர்கள் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லவும், சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்தனர்.. சுப்பிரமணியபுரம் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பம் + போஸ்ட் மார்ட்டம்
இறந்த நாயை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தல்லாகுளத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு போஸ்ட் மார்ட்டமும் நடைபெற்றது.. அப்போதுதான், அந்த நாய் 40 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. நாய்க்கு வெறி பிடித்துவிட்டது, அதனால்தான் தெருவில் இன்னொரு நாயுடன் சண்டை போட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டு, 3 பேரும் கட்டையால் அடித்து கொன்றதாக கூறியிருக்கிறார்கள்.. ஆனால், நாய்க்கு வெறி எதுவும் பிடிக்கவில்லையாம். நாயை அடித்துக் கொன்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.. சர்வதேச நாய்கள் தினத்தில் நடந்த இந்த கொடுமை விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.,
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications