மெரினா சாலையில் பைக் சாகசம்... 21 பேரை துரத்திச் சென்று பிடித்தனர் போலீசார்
சென்னை: மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பைக்குகளையும் சென்னை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் பைக் ரேஸில் ஈடுபட்ட சாந்தகுமார் என்ற இளைஞர் உயிரிழத்தார். அவருடன் வந்த நண்பர் பாலாஜி படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், விபத்துகளை ஏற்படுத்துவதும் வாடிக்கையான நிகழ்வாகவே மாறிப்போய்விட்டது. அதனை தடுக்கும் வகையில், போலீசார் தற்போது அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாருக்கு உத்தரவு
சென்னையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிரடி சோதனை
மெரினா சாலையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் தொடர் பைக் ரேஸில் ஈடுபட்டதை தொடர்ந்து, சிறப்பு அதிரடி சோதனையில் நேற்று முன்தினம் போலீசார் ஈடுபட்டனர். காமராஜர் சாலையில் 20 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பைக் ரேஸில் ஈடுபட்ட 80 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

242 வழக்குகள் பதிவு
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்ததாக 10 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 130 வழக்குகளும் என மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 7 கார்கள், 16 பைக்குகள், ஒரு ஆட்டோ என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர் சோதனை
இந்த நிலையில், நேற்று இரவும் 2 வது நாளாக போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ரேஸில் ஈடுபட்ட ஏராளமான இளைஞர்கள் சிக்கினர். போலீசாரிடம் இருந்து இளைஞர்கள் தப்பி செல்வது, போலீசார் அவர்களை விரட்டி பிடிப்பது போன்ற அதிரடி காட்சிகள் அரங்கேறின. பிடிக்கும் முயற்சியில் சாலையில் விழும் இளைஞர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அருகிலே ஆம்புலன்ஸ் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

பெற்றோர் ஒத்துழைப்பு முக்கியம்
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு ரேஸ் பைக்குகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் இரவு நேரங்களில் எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெற்றோர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே பைக் ரேசை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று போலீசார் கூறுகின்றனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications