புது தாலியின் ஈரம் கூட காயலை.. ஒரே மாசம்தான்.. இறுதியில் தற்கொலை.. பரிதாப ரக்ஷனா!
சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: புதுத்தாலி ஈரம்கூட காயவில்லை.. ஒரே மாசம்தான்.. வீடியோவில் கண்ணீர் விட்டு அழுது, இறுதியில் தற்கொலையும் செய்து கொண்டார் இளம்பெண் ரக்ஷனா.. அந்த முழு வீடியோ தற்போது வெளியாகி உள்ளதையடுத்து விசாரணையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.!
Recommended Video

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ரக்ஷனா.. 21 வயதாகிறது.. இவருக்கும் திருவள்ளூரை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும் கடந்த மாதம் கல்யாணம் நடந்தது.. 2 வீட்டு சம்மதத்துடன் தான் நடந்தது..

ஜெயராமன் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.. இந்நிலையில், ஜெயராமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், சம்பவத்தன்று ரக்ஷனா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, திருவேற்காடு போலீசார் ரக்ஷனாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் ஆரம்பித்தனர்.. முதல் விசாரணையே ஜெயராமன்தான்.. ஆனால், அவரிடம் எந்தவித க்ளூவும் கிடைக்கவில்லை.. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாகவே பதில் சொன்னார்... அதனால் அடுத்த விசாரணை ஜெயராமனின் பெற்றோரிடம் ஆரம்பமானது.
ஏனென்றால் கல்யாணமாகி ஒரு மாசம்தான் ஆவதால், வேறு ஏதாவது பிரச்சனை இருக்குமா என்று சந்தேகத்தில் விசாரித்தனர்.. அப்போதுதான், தற்கொலைக்கு முன்பு ரக்ஷனா, ஒரு வீடியோவை அவருடைய அப்பாவுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.. அந்த வீடியோவில் ரக்ஷனா அழுது கொண்டே பேசுகிறார்..
அதில் உள்ள முழு விவரம் இதுதான்:
"ஹாய் டாடி.. உங்களையும் அம்மாவையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால், நீங்கள் என்னை ஒருநாளும் புரிஞ்சிக்கிட்டதே இல்லை... என் கல்யாணத்துக்கு முன்னாடி நான் யாரை விரும்புகிறேன்னு கூட என்கிட்ட கேட்டதில்லை... உங்க 2 பேர் ஆசைக்காகத்தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்.. நீங்க அன்னைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருந்தீங்க.. அந்த நேரத்துல நான் வேணாம்னு சொன்னால் உங்களுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும்னு நினைச்சுதான் சரின்னு ஒத்துக்கிட்டேன்.. ஆனால், இதுல எனக்கு இஷ்டம் இல்லைன்னு தெரிஞ்சும்கூட என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கவில்லை
ஆனா எனக்கு பிடிக்கலன்னு எல்லாருக்குமே தெரியும்.. உங்களாலயும், அம்மாவாலயும்தான் அதை புரிஞ்சிக்கவே முடியல.. எனக்கு எது எது புடிக்கும்னு தெரிஞ்ச நீங்க, இந்த ஒரு விஷயத்துல மட்டும், என்னை பார்க்கவுமில்லை, கேட்கவும் இல்லை.. என் மனசில ஒன்னு இருக்கு.. ஆனா அதை கடைசி வரை யார்கிட்டயும் சொல்லவே முடியல.. எனக்கு ஒரு ஒரு நாளும் நரக வேதனையா இருக்கு.. கத்தி அழகூட முடியல டாடி. இன்னைக்கு வரை பிடிக்காதவரிடம் குடும்பம் நடத்தி வேதனையை அனுபவிச்சு வர்றேன்" என்று ரக்ஷனா பேசியுள்ளார்..
இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசாரின் விசாரணை அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.. இதையடுத்து, ரக்ஷனாவின் பெற்றோரிடமும் விசசாரணை ஆரம்பமாகி உள்ளது.. மேலும் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது.. கல்யாணத்தில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாலும், உண்மையிலேயே தம்பதிக்குள் வேறு ஏதாவது பிரச்சனை வந்ததா? அல்லது ரக்ஷனாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications