"சபலிஸ்ட்".. மொத்தம் 500 பெண்கள்.. தினமும் 2 பெண்கள்.. போலீசாரையே மிரள வைத்த கிராதகன்!
செக்ஸ் டார்ச்சர் தந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
சென்னை: மொத்தம் 500 பெண்களாம்.. தினமும் 2-ல் இருந்து பேராம்.. ஒருநாளைக்கு 2 பெண்களிடமாவது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விடுவாராம்.. இப்படி ஒரு வாக்குமூலத்தை அந்த இளைஞரே போலீசாரிடம் அளித்துள்ளார்.. அவருக்கு வயசு வெறும் 21தான் என்றால் நம்ப முடிகிறதா?!
சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறர்.. இவர் தினமும் வேலை முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம்..
அப்படித்தான் வீட்டுக்கு செல்லும்போது, திடீரென பைக்கில் வந்த இளைஞர் பெண்ணின் அருகில் வந்து பைக்கை நிறுத்தி உள்ளார்.. பிறகு பாலியல் சீண்டலில் நடுரோட்டிலேயே ஈடுபட்டுள்ளார்.. அடுத்த செகண்டில் பைக்கை கிளப்பி கொண்டு பறந்துவிட்டார்.

புகார்
கொஞ்ச நேரத்தில் என்னென்னமோ நடந்து விட்ட அதிர்ச்சியில் அந்த பெண் அலறினார்.. உடனடியாக சாஸ்திரி நகர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.. பெண் சொன்ன அடையாளங்களை வைத்து, தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. ஆனால், யாரும் அப்படி சிக்கவில்லை.. அதனால், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர்.. அதை வைத்து, அந்த இளைஞரின் பைக் நம்பரை எடுத்தனர்.. டிரேஸ் செய்தனர்..

விசாரணை
இறுதியில், வீட்டு அட்ரஸையும் கண்டுபிடித்துவிட்டனர்.. பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சரண் என்ற இளைஞர்தான சம்பந்தப்பட்ட நபர் என்பது தெரியவந்தது.. 21 வயசுதான் ஆகிறதாம்.. ஆனால், பாலியல் விவகாரங்களில் படுமோசமாக நடந்து வந்துள்ளார். சின்ன வயசில் இருந்தே இவர் இப்படித்தானாம்.. இப்போது ஒரு பைனான்ஸ் கம்பெனில் பில் கலெக்ஷ்ன் வேலை பார்க்கிறார்.. பணம் வசூல் செய்ய ஆங்காங்கே செல்லும்போதெல்லாம், தன் சபலத்தை நிறைவேற்றி கொண்டுள்ளார்..

2 வருடம்
யாராவது அழகான பெண்கள், கண்ணில் பட்டால் அவ்வளவுதான்.. பின்னாடியே பைக்கில் விரட்டி சென்று, அத்துமீறிவிடுவாராம்.. இளம்பெண்கள், சிறுமிகள் என யாரையுமே விட்டுவைப்பதில்லை.. அதிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில்தான், இளம்பெண்களுக்கு குறி வைப்பாராம். பல வருடங்களாக இந்த பழக்கம் இருந்தாலும், கடந்த 2 வருடங்களில் இது அதிகமாகி உள்ளது.. பாதிக்கப்பட்ட பெண்கள், இதை வெளியில் சொல்ல பயந்து கொண்டு இருந்துள்ளனர்.

வாக்குமூலம்
இதுவரை மொத்தம் 500 பெண்களிடம் தன் சபலத்தை கொட்டி உள்ளார் இந்த இளைஞர்.. ஒருநாளைக்கு 2 லிருந்து 5 பெண்கள் வரை செக்ஸ் டார்ச்சர் தந்துவிடுவாராம்.. இதை அவரே போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லி உள்ளார். இப்போது இந்த இளைஞர் கைதாகி உள்ளனர்.. பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து வந்து புகார் தர வேண்டும், அவர்கள் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications