Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளம்பும் ‘பென் டிரைவ்’ பூதம்.. 222 ஃபைல்களை அழிச்சிட்டு புதுசா 441 ஃபைல்? செந்தில்பாலாஜி பரபர வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியிடம் இருந்து அமலாக்கத்துறை கைப்பற்றிய பென் டிரைவில் இருந்த 284 ஃபைல்களில் 222 ஃபைல்கள் அழிக்கப்பட்டு, புதிதாக 441 ஃபைல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என செந்தில் பாலாஜி தரப்பு இன்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை தர லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனடிப்படையில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் உள்ளார்.

222 files were deleted and 441 new files were added in pen drive: senthil balaji alleges on ED

இந்நிலையில், அவர் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ வாதங்களை முன்வைத்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.

செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரமோ சாட்சிகளோ இல்லை. பா.ஜ.,வின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். நீங்கள் ஏன் பா.ஜ.கவில் இணையக்கூடாது என விசாரணையின்போது அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம் கேட்டுள்ளனர் என செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை அடுக்கியது.

அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளன, அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி வெளியே வந்தால் அவற்றைக் கலைக்கக்கூடும் எனத் தெரிவித்தார்.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, "அமலாக்கப்பிரிவு கைப்பற்றிய பல மின்னணு ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றிய பென் டிரைவில் இருந்த 284 ஃபைல்களில் 222 ஃபைல்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதிதாக 441 ஃபைல்கள் குறிப்பிட்ட அந்த பென்டிரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. சட்ட விரோதமாக 6 நாட்கள் பென் டிரைவ்கள் அமலாக்கத்துறையினரிடம் இருந்தது.

அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டவை. ரூ.1.34 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும். குற்றம்சாட்டப்பட்டதற்குப் பிறகு 9 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டு அதனை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது" என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்டனர்.

பின்னர் அமலாக்கத்துறை தரப்பில், "வங்கி பரிவர்த்தனை மூலமாக நடந்தால் மட்டுமே வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். லஞ்சப் பணத்தை செந்தில் பாலாஜி ரொக்கமாக கூட வாங்கியிருக்கலாம். விசாரணை நடத்தி முடித்தாலும் கூட பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது என்பதால் ஜாமின் வழங்க முடியாது. மருத்துவ காரணங்களுக்காக செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது" என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதையொட்டி செந்தில்பாலாஜி, புழல் சிறையில் இருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு காணொளிக் காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, செப்டம்பர் 29 வரை சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் காவல் 6வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+