என்ன இது.. சென்னை நகரில் ஒரே மாதத்தில் 23 நாட்கள் மழை! தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நகரத்தில் நவம்பர் மாதம் 23 நாட்கள் மழை பெய்துள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

    இது மிகவும் அரிதான நிகழ்வு மற்றும் அதிகப்படியான மழை பதிவாகி இருக்கிறது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால், கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது.

     200 வருடங்களில்

    200 வருடங்களில்

    இருநூறு வருடங்களில் நான்காவது முறையாக நவம்பர் மாதம் சென்னையில் 1,000 மில்லி மீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை. இப்போது மழை சற்று நின்று உள்ளது.

    ஜவாத் புயல்

    ஜவாத் புயல்

    வங்கக் கடலில் உருவாகியுள்ள ஜவாத் புயல் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

    பிரதீப் ஜான்

    பிரதீப் ஜான்

    இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நவம்பர் மாதம் சென்னை நகரத்தில் 23 நாட்கள் மழை பதிவாகியிருக்கிறது. மிகவும் அதிகமான, மேலும் மிகவும் அரிதான நிகழ்வு இதுவாகும் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை அவர் ஷேர் செய்துள்ளார்.

    சூரியனை பார்த்தது அபூர்வம்

    சூரியனை பார்த்தது அபூர்வம்

    அதாவது, ஒரு மாதத்தில் 7 நாட்கள் மட்டுமே மழை பெய்யாமல் இருந்துள்ளது. 23 மூன்று நாட்கள் மழை பெய்துள்ளது. எனவேதான் சென்னை இந்த அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் நீரியல் வல்லுனர்கள். மேலும், சென்னை மக்கள் சூரியனை அபூர்வமாகத்தான் பார்த்துள்ளனர். நவம்பர் மாதத்தில் அதிக நாட்கள் சென்னை மக்கள் சூரியனை பார்க்கவில்லை. எனவே சூரியன் தென்பட்ட போதெல்லாம், அதை போட்டோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் ஷேர் செய்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+