"நழுவுதே மீனு".. எடப்பாடி பழனிசாமி அதை சொன்னதுமே.. பட்டென நிமிர்ந்த அமித்ஷா.. அப்ப 2 சிக்கல் இருக்கே
சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார்.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார்.. சீட் விவகாரம் குறித்த சில தகவல்கள் வெளிவந்த நிலையில், அதையொட்டி, 2 விதமான சிக்கல்கள் இனி கூட்டணிக்குள் வரக்கூடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பொதுச்செயலாளராக பதவியேற்று, தான் சந்திக்க போகும் முதல் தேர்தல் என்பதால், எம்பி தேர்தலில் மொத்த கவனத்தையும் திருப்பி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி..
கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான், கட்சி தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும், செல்வாக்கையும் காட்ட முடியும் என்றும் எடப்பாடி நம்புகிறாராம். அதனால்தான், அந்த தேர்தல் ஆலோசகருடன் வியூகத்தை பலமாக வகுத்து வருவதாக சொல்கிறார்கள்..

அதிமுக பொதுச்செயலாளர்: அதிமுகவில் 75 மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக செயல்படுவதாக கூறப்படும் நிலையில், இவைகளை குறைத்து ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றும் முடிவிலும் இருக்கிறாராம் எடப்பாடி.. அப்படி மாற்றம் நிகழும் நிலையில், சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகளை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளாராம். ஓபிஎஸ் தற்போது திருச்சியில் மாநாடு நடத்தி முடித்துவிடவும், தற்போதைய முழு கவனத்தையும், டெல்டாவை தன்பக்கம் கொண்டுவருதிலேயே செலுத்தி வருகிறாராம் எடப்பாடி.
அதேபோல, மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதனால்தான், பாமகவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.. அதேபோல, தேமுதிகவையும் சமாதானப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கிறாராம்.. பாமக, தேமுதிக என 2 கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பை, தன்னுடைய நம்பிக்கைக்குரிய மாஜிக்களிடம் ஒப்படைத்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பும் செய்திகள் வெளியாகின.
எத்தனை சீட்டுகள்?: அதேபோல, கூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்பதிலும் தெளிவான முடிவுடன், காய் நகர்த்தலை தொடங்கியுள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆனால், கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சியாக பாஜக உள்ளதால், 15க்கும் மேற்பட்ட இடங்களை அக்கட்சி குறி வைத்துள்ளதாக தெரிகிறது.. அண்ணாமலையோ, ஒருபடிமேலேபோய், 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொல்லி கொண்டிருக்கிறார்.. ஆனால், இதுகுறித்து அதிமுக இதுவரை எந்த கருத்தையும் சொல்லவில்லை..
அதேசமயம், எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து அதிமுக சீனியர்களுக்குள் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.. இப்படித்தான் கடந்த மாதம் ஒரு தகவல் கசிந்தது.. அதன்படி, தமிழகம், புதுச்சேரியை சேர்த்து, 23 தொகுதிகளில் அதிமுக போட்டியிடபோவதாகவும், மீதமுள்ள 17 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து வழங்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
ஒற்றை இலக்கு: அதாவது அதிமுக கணக்குப்படி, பாஜகவுக்கு "ஒற்றை" இலக்க தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்றே தெரிகிறது.. இதற்கு சம்மதிக்க வைக்கத்தான், டெல்லி பாஜகவிடம், அதிமுகவின் தூதரை அனுப்பி அப்போதே முதல்கட்ட பேச்சு நடத்தினாராம் எடப்பாடி பழனிசாமி.. கடந்த ஒரு வருட காலமாகவே, "25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என்று அண்ணாமலை சொல்லி கொண்டிருக்கும்போது, சிங்கிள் டிஜிட் சீட்டுகள்தான் ஒதுக்கப்படுமா? அப்படியே ஒதுக்கினாலும் கமலாலயம் என்ன செய்ய போகிறது? என்பதெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக வலம்வந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் டெல்லிக்கு சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசும்போது, எப்படியும் கூட்டணி குறித்து இறுதி முடிவை இன்று அறிவித்துவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. அதன்படியே, கூட்டணி தொடரும் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம், அமித்ஷாவிடம் சீட் விவகாரம் குறித்தும் எடப்பாடி பேசியதாக செய்திகள் கசிந்துவருகின்றன.

அமித்ஷாவுடன் சந்திப்பு: அமித்ஷாவை அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், வேலுமணி, கேபிமுனுசாமி சந்தித்து பேசினார்கள்.. இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருந்திருக்கிறார்.. அப்போது 2 தரப்பிலும் சில முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.. முக்கியமாக, அதிமுக பிரச்சனைகள் தொடர்பாக பேசியிருக்கிறார்கள்.. 2 தரப்பும் தேர்தலில் பிரிந்து சென்று சந்தித்தால் தோல்விதான் கிடைக்கும் என்றும், அதனால், இனிவரும் நாட்களில் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவென்று தெரியவில்லை.. கடந்த ஒரு வருடகாலமாகவே, மேலிட தலைவர்கள் இதையே வலியுறுத்தி வரும்நிலைலயில், இப்போதும், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தையே வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அண்ணாமலையும், இதைத்தான் சொல்லி வருகிறார்.. ஒன்று, தனியாக நின்று களம் காண்பது அல்லது ஒருங்கிணைந்த அதிமுகவாக இணைந்து போட்டியிடுவது என்பதை வலியுறுத்தி வருகிறார். இதையேதான், இன்றைய தினமும், அமித்ஷா எடப்பாடியிடம் சொன்னதாக தெரிகிறது.
சீட் ஒதுக்கீடு: அதேபோல, எம்பி தேர்தலில், தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பதை இப்போதே சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டதாக கூறப்படுகிறது... அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக இந்த முறை, மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்க இருப்பதால், இப்போதே எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாராம்.. எப்படி பார்த்தாலும், 5 முதல் 7 தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..
எப்படிப்பார்த்தாலும் சீட் விவகாரத்திலும் + ஒருங்கிணைந்த அதிமுக என்ற விவகாத்திலும் மீண்டும் கூட்டணிக்குள் சலசலப்பு கிளம்பலாம் என்கிறார்கள்.. 25 தொகுதிகளில் வெல்வோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விடாமல் சொல்லி வரும்நிலையில், எடப்பாடி எவ்வளவு சீட் ஒதுக்க போகிறார்? இந்த முறை தாமரை மலருமா?.. பொறுத்திருந்து பார்க்கலாம்..!!
இந்த சந்திப்பிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி அண்ணாமலையுடன் எந்தவிமான மோதல் போக்கும் தனக்கு இல்லை என்று கூறினார்.. "எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள். திமுகவில் உள்ளது போன்ற அடிமை கட்சிகள் இல்லை. அந்தந்த கட்சிகளுக்கு கொள்கை இருக்கிறது. கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்படுவார்கள். கூட்டணி என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்" என்றார்.
ஓபிஎஸ் மாநாடு: முன்னதாக, ஓபிஎஸ் மாநாடு தொடர்பான கேள்வி எடப்பாடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிசாமி, "அவரைத்தான் கேட்க வேண்டும்" என்றார்.. பிடிஆர் ஆடியோ தொடர்பான கேள்விக்கு, "அதிர்ச்சியூட்டும் தகவல் அந்த ஆடியோவில் இருக்கிறது.. இந்த ஆடியோ தொடர்பாக ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications