ஸ்டான்லியில் ஷாக் சம்பவம்.. 3வது மாடியிலிருந்து குதித்த டாக்டர்.. தற்கொலையால் அதிர்ந்த சென்னை!
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்
சென்னை: டாக்டரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவத்தினால் தலைநகரமே அதிர்ந்து போய் உள்ளது... ஆனால் தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்றும், தங்கள் மகன் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.. குணமாகி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பாதிப்படைந்தோரும், உயிர் பலியும் நிறைய பெருகி வருகிறது.
சுகாதாரத்துறை எவ்வளவோ முயன்று பாடுபட்டு இதனை தடுக்க போராடி வருகிறது.. ஆயிரக்கணக்கான டாக்டர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் சிகிச்சை தந்து வருகிறார்கள்.

அர்ப்பணிப்பு
இதனால் இவர்கள் தங்கள் குடும்பங்களை மறந்து, முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.. லீவும் எடுப்பதில்லை.. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.. அந்த வகையில், ஒரு பயிற்சி மருத்துவர் தற்கொலையே செய்து கொண்டுள்ளார். சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இந்த டாக்டர் வேலை பார்த்து வருகிறார்.. 24 வயதாகிறது.. முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் இவர்.

நைட் டியூட்டி
கொரோனா வார்டில் பணியாற்றி வந்திருக்கிறார்.. நேற்றிரவு 9.30 மணி வரை டியூட்டியிலும் இருந்துள்ளார். இன்று திடீரென 3வது மாடியில் இருந்து குதித்து விட்டார்.. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமானார். காலை நேரத்தில் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்த மக்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.

விசாரணை
தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.. தற்கொலை செய்து கொண்டவர் உடுமலை பேட்டையை சேர்ந்தவர் என்றும் பெயர் கண்ணன் என்றும் தெரியவந்துள்ளது. மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை துவங்கி உள்ளது.

வேண்டுகோள்
தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும்,மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, தங்கள் மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று டாக்டரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பு புகார்
நீட் தேர்வில் கண்ணன் தேர்ச்சி பெற்றவராம்.. அதனால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், கண்ணனுக்கு கல்யாணம் செய்வதற்காக அவரது விருப்பத்தின் படியே கல்யாண ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்து ஒரு மாசமே ஆன நிலையில், இந்த தற்கொலை தங்களுக்கு சந்தேகமளிப்பதாக கூறி புகாரையும் அளித்துள்ளனர்... இதனால் இந்த தற்கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மன அழுத்தம்
உண்மையில் டாக்டர் கண்ணன் எதனால் இறந்தார் என தெரியவில்லை.. எனினும், போலீசாரை போலவே, பல டாக்டர்களும் மன அழுத்தத்தில் சிக்கி உள்ளனர்.. தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டி உள்ளது.. மருத்துவ மாணவர்கள், மட்டுமல்லாமல் டாக்டர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டியது உடனடி கடமையாகிறது.. இவர்களுக்கு பணிச்சுமையை குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏதாவது நடவடிக்கையை எடுத்தாக வேண்டி உள்ளது.. ஒவ்வொரு டாக்டரின் உயிரும் இந்த சமுதாயத்துக்கு மிக மிக அவசியமானது.. விலை மதிக்க முடியாதது!
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications