சங்கீதாவுக்கு ₹250 கோடி செட்டில்மென்ட் தர விஜய் சம்மதம்? 2 காரணம் இதுவே.. தீவிரமாகும் சமாதான பேச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி சங்கீதா விவாகரத்து கோரியது விஜய்யின் அரசியல் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. தமிழக அரசியலை மட்டுமல்ல, தமிழ் சினிமாவையே உலுக்கும் வகையில், தவெக தலைவரும், முன்னணி நடிகருமான விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல் இப்போது நீதிமன்ற படிகளேறியுள்ளது... கடந்த 4 நாட்களாகவே இதை பற்றின செய்திகள்தான் மீடியாக்களில் பரபரத்து வருகின்றன.. இது தொடர்பான மற்றொரு செய்தி தற்போது கசிந்து, மேலும் பரபரப்பை தந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இப்போது அது அதிகாரப்பூர்வமான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது..

Sangeetha Vijay

சங்கீதா விஜய்

லண்டனை சேர்ந்த தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யை காதலித்து கடந்த 1999ம் ஆண்டு கரம் பிடித்தார்.. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது..

இப்படிப்பட்ட சூழலில்தான், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..

இந்த விவாகரத்து வழக்கின் பின்னணியில் பல்வேறு அதிர வைக்கும் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.. குறிப்பாக, திரைத்துறையை சேர்ந்த ஒரு பிரபல நடிகையுடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் சங்கீதாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகத் தெரிகிறது..

நடிகையுடன் தொடர்பு

அந்த நடிகையுடன் விஜய் வெளிநாடுகளுக்குச் செல்வது மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான போட்டோக்கள் சோஷில் மீடியாவிலும் பரவியது, சங்கீதாவிற்கும் அவரது பிள்ளைகளுக்கும் பெரும் அவமானத்தைத் தேடித்தந்துள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன..

இதுமட்டுமன்றி, சமீபகாலமாக சங்கீதாவிற்கு பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும், இந்த விவாவகரத்து முடிவிற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.. சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, வரும் ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது..

அரசியல் பின்னடைவு

அரசியலில் தடம் பதித்துள்ள விஜய்க்கு, இந்த தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.. அவரது அரசியல் பிம்பத்தை சிதைக்கும் வகையில் இந்த விவகாரம் உருவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர விஜய் தரப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது..

இந்நிலையில், மிக முக்கியமான & பரபரப்பான அப்டேட் என்னவென்றால், தனது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளுக்காக சுமார் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க விஜய் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது..

பிரம்மாண்ட தொகை

அதாவது விவாவகரத்து மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காகவும், குடும்பத்திற்குள் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து ஒரு சுமூகமான உடன்பாட்டிற்கு வரவும் இந்த பிரம்மாண்ட தொகையை வழங்க அவர் சம்மதித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. விவாவகரத்து மனுவை திரும்பப் பெறக்கோரி விஜய் தரப்பில் இருந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக ஊடகமொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

இருந்தாலும், இந்த சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு சங்கீதா தரப்பு எந்தளவிற்கு உடன்படும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.. விஜய்யின் அரசியல் எதிர்காலம், குடும்ப கவுரவம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு இந்த 250 கோடி ரூபாய் விவகாரம் ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது..

ஏப்ரல் 20ம் தேதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணையின் போது, விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அப்போதுதான் இந்த சமரச பேச்சு சுமூகமாக முடிந்ததா? அல்லது சட்டப் போராட்டம் தொடருமா என்பது குறித்த தெளிவான உண்மை நிலவரம் தெரியவரும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+