தமிழகத்தில் இன்று.. ஒரே நாளில் 25000 அரசு ஊழியர்கள் ஓய்வு! உருவானது 1.75 லட்சம் காலி பணியிடங்கள்!
சென்னை : தமிழக அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் 25,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது உள்ள தகவல்களில் படி மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 14 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது தமிழக மக்கள் தொகையில், ஒரு லட்சம் பேருக்கு 1,500 என்ற எண்ணிக்கையில் அரசு பணியாளர்கள் உள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு நிலவரப்படி தமிழக அரசில் 14 லட்சத்து 5 ஆயிரத்து 59 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 6 லட்சத்து 98 ஆயிரத்து 32 பேர் நிரந்தர ஊழியர்களாகவும், 7 லட்சத்து 7 ஆயிரத்து 27 பேர் தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.

ஊழியர்கள் எண்ணிக்கை
சுமார் 14 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு ஒரு ஆண்டு மட்டும் 62 ஆயிரத்து 908 கோடி ரூபாய் சம்பளம் மற்றும் ஓய்வூதிமாக வழங்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த தமிழக அரசு வருமானத்தில் 40 சதவீதம் ஆகும். இந்தியாவிலேயே அரசு ஊழியர்களுக்கு மாநில வருவாயில் அதிக தொகையை வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

பணி ஓய்வு
இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் எண்ணிக்கை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் 25,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். வருவாய், கல்வி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் என இன்றுடன் பணி ஓய்வு பெறுகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 என்பதிலிருந்து 60 வயதாக மாற்றப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசுத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக 25 ஆயிரம் பேர் இன்றுடன் தங்கள் பணியை நிறைவு செய்கின்றனர். புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் தற்போது கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெறுகின்றனர்.

காலிப் பணியிடங்கள் உயர்வு
ஏற்கனவே மாநில அரசின் துறைகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 25,000 பணியிடங்கள் காலியாகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படவுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications