தமிழ்நாட்டை புயல் தாக்குமா? 26 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மைய ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
சென்னை: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் மழை நேரத்திற்கு பின் தினமும் 1-2 மணி நேரம் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மாலை நேரத்திற்கு பின் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மழை
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை: ஆனாலும் இன்று மழை பெய்யும். இன்று சென்னையிலும் கனமழைக்கு ஓரிரு இடங்களில் வாய்ப்பு உள்ளது. மாலைக்கு பின் சென்னையில் மழை பெய்யும். காலை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

வேறு எங்கு
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யும். சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் மாலையில் இருந்து கனமழை பெய்யலாம். இங்கே காலையில் இருந்து மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாவட்டங்கள்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்று உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இது வரும் 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வங்கக்கடல்
பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 25 ஆம் தேதிவாக்கில் இது நகர தொடங்கும். புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை. இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும். இருப்பினும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications