தமிழகம் முழுவதும் கொரோனாவிற்கு 26 காவலர்கள் மரணம் - 7800 பேர் பாதிப்பு

தமிழக காவல்துறையில் கொரோனா தொற்றால் 7,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவிற்கு 26 காவலர்கள் மரணமடைந்துள்ளனர். 7800 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 50 சதவிகிதம் பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஆறரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர். கொரோனா முன்கள பணியாளர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்பட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

26 Police killed in Tamil Nadu Corona - 7800 injured

சென்னை காவல்துறையில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட காவலர்களின் மொத்த எண்ணிக்கை 2,572 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய தினம் 8 காவலர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பினார்கள். இதனால் சென்னை போலீசில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக காவல்துறையை பொறுத்த மட்டில் இதுவரை 7,800 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அவர்களில் 26 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தலைமை செயலக காலனி காவல் உதவி ஆய்வாளர் பாபு என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்ற செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+