சல்லி சல்லியா நொறுங்கி.. ஸ்கெட்ச் எடப்பாடிக்குதான்.. ஓங்கியடித்த திமுக.. நிமிரும் ஓபிஎஸ்.. நோ ஆப்ஷன்

எடப்பாடி பழனிசாமியின் கொங்கு மண்டல பலத்தையே நொறுக்கி காட்டி உள்ளது திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய ஒவ்வொரு பலத்தையும் எடப்பாடி பழனிசாமி, அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் கலக்கமும் அதிமுக தொண்டர்களிடம் சூழ்ந்து வருகிறது.

அதிமுக விவகாரம் அதே பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி சற்று சோர்ந்து போய் உள்ளதாகவும், பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு வந்த தினத்தன்று அப்செட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, தனது ஆதரவாளர்கள் உள்பட யாரையுமே சந்திக்கவில்லை என்கிறார்கள்.. அவரை சந்திக்க சென்றவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்களாம்.

 விஸ்வரூபம்

விஸ்வரூபம்

பொதுக்குழு நடத்தியதில் பல சட்ட சிக்கல்களில் எடப்பாடி சிக்க உள்ள நிலையில், இடைக்கால பொதுச்செயலாளார் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, தன்னுடைய இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தது, இன்னொரு சிக்கலை இழுத்து கொண்டு வந்துவிட்டது.. போதாக்குறைக்கு, தங்களிடம் எடப்பாடி பழனிசாமி எந்த விஷயம் குறித்தும் ஆலோசிப்பதில்லை என்று கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்களே புகார்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. இதுவும் எடப்பாடிக்கு சிக்கலை தந்துள்ளது.

 அசைன்மென்ட்

அசைன்மென்ட்

அதுமட்டுமல்ல, கடந்த மாதம் 23ம் நடந்த பொதுக்குழுவும் சரி, 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவும் சரி, உறுப்பினர்களுக்கு பணம் தரப்பட்டது, அந்த பணத்தை தந்துதான் எடப்பாடி அவர்களை தன்பக்கம் வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி கூறப்பட்டு வருகின்றன.. ஒருவேளை பணம் பெற்றுக் கொண்டுதான், பொதுக்குழுவில் பலர் கலந்து கொண்டார்கள் என்பது உண்மையானால், அதே பணத்தை தந்து, ஓபிஎஸ் டீமும் அவர்களை விலைக்கு வாங்குவது எளிது என்கிறார்கள்.. பணம்தான் அனைத்தையும் தீர்மானித்துள்ளது என்றால், அதே பணம், எடப்பாடி டீமில் உள்ளவர்களையும் சாய்த்துவிடும் என்கிறார்கள்.. இதுவும் எடப்பாடிக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.

 4 புள்ளிகள்

4 புள்ளிகள்

இதைதவிர, எடப்பாடி டீமில் இருக்கும் முக்கிய நபர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அந்த வலையில் பல நிர்வாகிகள் விழுந்துள்ளதாகவும் தெரிகிறது.. அதுவும், 4 சென்னை மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துள்ளதாக பரவி வரும் செய்தி, எடப்பாடிக்கு இன்னொரு அதிர்ச்சியை தந்து வருகிறது.. மேலும், எடப்பாடி தரப்பிலுள்ள, பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரை, தங்கள் பக்கம் இழுக்க, கால அவகாசம் ஓபிஎஸ்ஸுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகிறது.. ஒருவேளை, மேல்முறையீட்டு வழக்கை இழுத்து கொண்டே சென்றால், அந்த வாய்ப்பை ஓபிஎஸ் பயன்படுத்திக் கொள்வார் என்கிறார்கள்.. இதுவும் எடப்பாடிக்கு கலக்கத்தை தந்து வருகிறதாம்.

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

போதாக்குறைக்கு, எடப்பாடியின் பலம் என்று சொல்லப்படும் கொங்கு மண்டலத்தை, செந்தில் பாலாஜி கட்டி இழுத்துக் கொண்டு திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்.. இது எடப்பாடி அரசியலின் அடிமடியிலேயே கை வைத்துவிட்டது போலாகிவிட்டது.. தன்னுடைய கொங்குவிற்கு எடப்பாடி செய்யாத நலத்திட்டமில்லை, அறிவிக்காத அறிவிப்புகள் இல்லை.. ஓபிஎஸ், வைத்திலிங்கம் அன்று கடுப்பானதே, எடப்பாடி தன்னுடைய கொங்குவை மட்டும் கவனித்து கொள்கிறார், கொங்கு நிர்வாகிகளுக்கு மட்டும் போஸ்டிங் தருகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துதான்.. அந்த அளவுக்கு கொங்குவை கட்டிக்காத்த நிலையில், இன்று திமுக பக்கம் இழக்கும் நிலைமைக்கும் ஆளாகி வருவது, எடப்பாடிக்கு இன்னொரு கலக்கத்தை தந்து வருகிறதாம்.

 சாய்ஸ் + சான்ஸ்

சாய்ஸ் + சான்ஸ்

இப்படி ஒவ்வொன்றாக தன்னுடைய பலத்தை இழந்து கொண்டிருக்கிறாராம் எடப்பாடி.. அப்படியானால் அவருக்கு என்னதான் சாய்ஸ்? என்ற அலசல்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.. முதலில், கொங்குவில் இழந்து வரும் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு உள்ளது.. காரணம், தனி ஒரு நபராக மட்டுமே, தன்னுடைய ஆளுமையை அங்கு இத்தனை வருட காலம் கட்டமைத்த நிலையில், அத்தனையும் நொறுங்கி கொண்டிருக்கிறது.. திமிறி எழும் திமுகவை, வீழ்த்த பாஜக ரெடியாகிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி இதில் முந்திக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இன்றைய தினம் ஏற்பட்டுள்ளது.

 தலை + இலை

தலை + இலை

கட்சி விஷயத்தில், ஓபிஎஸ் கோபித்துக் கொண்டு, தனியாக பிரிந்து சென்றுவிட்டால் அதிமுக கட்சி மேலும் உடையும், அத்துடன் இரட்டை இலையும் முடக்கப்பட்டுவிடும்.. இதை தொண்டர்கள் தாங்கி கொள்ள மாட்டார்கள்.. காரணம், இன்றுவரை அதிமுகவுக்கு பலமாக இருப்பதே தொண்டர்கள்தான் என்றால், அந்த தொண்டர்களுக்கு பலமாக இருப்பது "இலை"தான் என்பதை மறந்துவிடக்கூடாது.. இதற்கு பேசாமல் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து விடுவதே சட்டரீதியான + கட்சி ரீதியான நல்ல முடிவு என்கிறார்கள்.. எடப்பாடி இல்லாமல், ஓபிஎஸ்ஸாலும் கட்சிக்குள் எதுவும் செய்ய முடியாதுதான்.. இவ்வளவு பெரிய கட்சியை கட்டிக்காப்பாற்ற, ஓபிஎஸ்ஸின் மென்மைத்தன்மை மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் அதிரடியும்தான் அவசியம் தேவைப்படுகிறது. நல்ல முடிவை எடப்பாடி எடுப்பாரா? என்று ஏங்கி போயுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்..!

ஜூலை 11

ஜூலை 11

இன்றைய தினம்கூட, அதிமுகவில் ஒற்றை தலைமை வழக்கு விசாரணைக்கு வந்தது.. "ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும், இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இனிமேலும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், கட்சிக்கு இந்த பிடிவாதம் நல்லதல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமி இல்லாமல், ஓபிஎஸ்ஸாலும் கட்சிக்குள் எதுவும் செய்ய முடியாதுதான்..

"ரத்தத்தின் ரத்தங்கள்"

இவ்வளவு பெரிய கட்சியை கட்டிக்காப்பாற்ற, ஓபிஎஸ்ஸின் மென்மைத்தன்மை மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் அதிரடியும்தான் அவசியம் தேவைப்படுகிறது.. கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு, கட்சிக்குள்ளேயே தான் தீர்வு காண வேண்டுமே தவிர, நீதிமன்றத்தில் அல்ல, அப்படியே நீதிமன்றத்திற்கு சென்றாலும் தீர்ப்பை பெறுவது அவ்வளவு எளிதல்ல.. அப்படி தீர்ப்பு கிடைத்தாலும், அது நீண்ட நாள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது சந்தேகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. நல்ல முடிவை எடப்பாடி எடுப்பாரா? என்று ஏங்கி போயுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+