எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழர்.. பனி, குளிரை வென்று சாதித்த கோவளம் இளைஞர்.. யார் இந்த ராஜசேகர்?
சென்னை : சென்னை கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற 27 வயது இளைஞர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராஜசேகர்.
தமிழ்நாடு கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, நேற்று மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமமான கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர். அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் ராஜசேகர். அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அதற்குரிய பயிற்சிகளைத் தொடங்கி, தொடர்ந்து மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றார். ஒரு வருட காலமாக மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். 6 மலை உச்சிகளில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் கனவை நோக்கி நடை போட்டார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி குளிரைத் தாங்கவேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும் மனதையும், குளிருக்குத் தயார் செய்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு உறுதியோடு தயாரானார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை நேற்று (மே 19) அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். எவரெஸ்ட் உச்சியைத் தொடும் தனது கனவை நிஜமாக்கியுள்ளார் தமிழரான ராஜசேகர்.

ஒரு மாதத்திற்கும் மேலான கொடுமையான பயண அனுபவத்தில் ஏகப்பட்ட சோதனைகள், தடைகளைக் கடந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார் ராஜசேகர். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார் ராஜசேகர்.
தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார்.

கனவைத் துரத்தி, அதற்காக கடுமையாக உழைத்து, எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கும் ராஜசேகர், சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக உருவாகியிருக்கிறார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கும் சாதனைத் தமிழர் ராஜசேகர் நம் தமிழ்நாட்டுக்கே பெருமை.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications