கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் தினசரி 2 ஜிபி டேட்டா இலவசம் - திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக 2ஜிபி டேட்டா தரும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. முதல்வர் பழனிச்சாமி இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று இந்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பலனடைய உள்ளனர்.

Recommended Video

    கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா… திட்டத்தை தொடங்கி அசத்திய முதல்வர்!

    கொரொனோ பரவலை தடுக்கும் வகையில் கடந்த 10 மாத காலமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

    2GB data is free for TamilNadu college students from today

    இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவிடும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    ஏப்ரல் 2021 வரை எல்காட் நிறுவனம் மூலமாக இணையவழியில் கல்விகற்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தினசரி 2ஜிபி டேட்டா இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள்,பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படவுள்ளது. இன்று இந்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பலனடைய உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+