Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2வது நாளாக ரெய்டு.. 'பராசக்தி' தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் மனைவி யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வசிக்கும் சென்னை தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னதாக ஆகாஷ் பாஸ்கரன் இல்லத்தில் நேற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அமலாக்கத்துறை வலையில் சிக்கியுள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி தாரணி யார்? அவர்களது பின்னணி பற்றி பார்ப்போம்.

பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று வீட்டில் வைத்தே அவரிடம் விசாரணையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தினார்கள். தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் யார் என்றால், பிரபல நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

mk stalin udhayanidhi stalin Enforcement Directorate

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான 'நானும் ரவுடிதான்' படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிருக்கிறார். தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தாயரிப்பாளராக மாறி, டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பல்வேறு படங்களை தயாரித்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடித்து, இயக்கி வரும் 'இட்லி கடை' படம் தான், தயாரிப்பாளராக ஆகாஷ் பாஸ்கரன் எடுக்கும் முதல் படம் ஆகும். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அதேபோல் இறுதிச் சுற்று, சூரைப் போற்று படங்களை இயக்கிய, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்து வரும் 'பராசக்தி' படத்தையும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். அதனைத்தொடர்ந்து அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தை அவரே இயக்கி தயாரிக்க உள்ளார். இதுதவிர ஆகாஷ் பாஸ்கர் தயாரிக்கும் சிம்புவின் 49-வது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இப்படி பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்களை குறுகிய காலத்தில் ஆகாஷ் பாஸ்கர் தயாரிப்பது குறித்து தகவல்கள் வந்ததால், இதன் பின்னணி என்பது குறித்து விசாரிக்கும் விதமாக அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆகாஷ் பாஸ்கரன் யார் என்றால் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை பாஸ்கரன் தான் சேலத்தில் உள்ள பிஆர்ஆர் ஸ்வர்ண மாளிகை என்ற நகைகடையின் உரிமையாளர். ஆகாஷ் பாஸ்கரன் மனைவி தாரணி யார் என்றால் கவின்கேர்' குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மூன்றாவது மகள் ஆவார். தாரணியின் அம்மா தேன்மொழி, கலைஞர் கருணாநிதியின் பேத்தியாவார். கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் தான் தேன்மொழியாவார்.

தேன்மொழியின் மகள் தாரணியை கடந்த ஆண்டு ஆகாஷ் பாஸ்கர் திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தனுஷ், நயன்தாரா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அமலாக்கத்துறை ரெய்டு முதல்வரின் உறவினர் வரை நீண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+