செஸ் ஒலிம்பியாட்டில் ஒரு “புட் ஃபெஸ்டிவல்” - வாய் ஊற வைக்கும் 3,500 வகை உணவுகள் - வீரர்கள் ஹேப்பி
சென்னை: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னையில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பேனர்களில் பாஜகவினர் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை ஒட்டிய நிலையில் அதன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கருப்பு மை பூசியுள்ளனர்.
Recommended Video
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க இருக்கிறது. ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் இதில் கலந்துக்கொள்ள உள்ளனர். பலர் ஏற்கனவே சென்னைக்கு வருகை தந்து இருக்கின்றனர்.
போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசின் நிதிப்பங்களிப்புடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள இந்த போட்டியை தமிழ்நாடு அரசு பிரபலப்படுத்தியும் வருகிறது.
இந்த போட்டியை மேலும் பிரபலமாக்கும் வகையில் விளம்பர படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டு உள்ளது தமிழ்நாடு அரசு. இதனை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வர உள்ளார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் லட்சினையான "தம்பி" என பெயரிடப்பட்டு உள்ள குதிரை சிலையை வழங்கினர்.

சிறப்பான ஏற்பாடுகள்
தமிழ்நாடு அரசு தரப்பில் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது.

உணவு
வீரர்கள் தங்குமிடங்கள், விளையாட்டு அரங்குகள் என அனைத்துக்கும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கும் தமிழ்நாடு அரசு, விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில், உணவுகளில் குறை வைத்துவிடுமா என்ன? பல விதமான உணவு முறைகளை கடைபிடிக்கும் பன்னாட்டு வீரர்கள் இதில் கலந்துகொள்வதால் பல வகையான உணவுகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறது.

3,500 வகை
குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு அந்தந்த நாட்டு உணவுகளை வழங்குவதற்காக 77 வகையான மெனு கார்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், சிற்றுண்டிகள் தொடங்கி 3,500 க்கும் அதிகமான உணவுகள் இடம்பெறுகின்றன. இவற்றில் 700 உணவுகள் அதிகமானவர்கள் பொதுவாக எடுத்துக்கொள்ளும் பிரதான உணவுகளாக உள்ளன. இவற்றை தயாரிப்பதற்காகவே ஏராளமான சமையல் கலைஞர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

ஒரு வார தயாரிப்பு
காலை, மதியம், இரவு வேளைகளில் உட்கொள்ளும் பிரதான உணவுகள், தேநீர், இடைத்தீனிக்கள் போன்றவற்றின் பட்டியலை தயாரிப்பதற்கே ஒரு வாரம் ஆனதாக தெரிவிக்கிறார் இதனை மேற்பார்வையிடும் சமையல் கலைஞர் ஜி.எஸ்.தல்வார். சூப், ஜூஸ், ஸ்டாட்டர்ஸ், கோல்டு பிளாட்டர்ஸ், சாலட், சிற்றுண்டிகள், முக்கிய உணவுகள் என வகைப்படுத்தப்பட்டு நாடுகளின் வாரியாக பட்டியலிட்டு உணவுகளை ஏற்பாடுகள் செய்கிறார்களாம்.

சிறப்பு உணவுகள்
இது எந்த விளையாட்டு போட்டிகளிலும் கிடைக்காத அளவுக்கு வகை வகையான புதுமையான உணவுகளும் இதில் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர். இந்தியன் முதல் இத்தாலியன் வரை, அமெரிக்கன் முதல் அரேபியன் வரை சகல உணவுகளும் இங்கு கிடைக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர். இதில் வெளிநாட்டு வீரர்களுக்கு என்று சிறப்பு மதுபானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications