கிளாம்பாக்கம்.. தாம்பரம்- எழும்பூர்.. வேளச்சேரி டூ பரங்கிமலை.. ரயில்வே மூன்று மேஜர் அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் கூறினார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் பிப்ரவரி 20 முதல் 05 ஏப்ரல் 2026 வரை மின்சார ரயில் இயக்கத்தில் செய்யப்பட்டுள்ள தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதுபற்றியும் விவரித்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் பிப்ரவரி 20 முதல் 05 ஏப்ரல் 2026 வரை மின்சார ரயில் இயக்கத்தில் செய்யப்பட்டுள்ள தற்காலிக மாற்றங்கள் குறித்து சென்னை பூங்கா நகரில் உள்ள ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

3 announcements Kilambakkam Railway Station Egmore Station Velachery to Parangimalai

அப்போது பேசிய அவர், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக நடைமேடை 10 மற்றும் 11ல் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வரும் 20 தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைமேடை 5 மற்றும் 6 இயக்கப்படும் .

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் விரைவு ரயில்கள் இயக்கப்படும் நடைமேடை 6 லிலும் , செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நடைமேடை 5 லிலும் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை உட்பட இடைப்பட்ட பிப்ரவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தெற்கு ரயில்வேயில் தற்காலிக அட்டவணைப்படி மட்டுமே புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும். மின்சார ரயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன .எனவே ரயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும்.

புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரயில்கள் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெறுகிறது. அந்த மாத இறுதியில் போக்குவரத்து தொடங்கும், விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+