‛‛குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன் போடனும்’’.. போலீசை தாக்கிய பெண்.. மொத்தமாக சிக்கிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சூளைமேடு பகுதியில் குடிபோதையில் வாகனத்துடன் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் தனது கணவருக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார். இதில் இளம்பெண் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மதுபானம் குடித்து வாகனம் ஓட்டக்கூடாது என போலீசார் அறிவுரைகளை வழங்கினாலும் கூட பலரும் அதனை பின்பற்றுவது இல்லை. இவ்வாறு விதிகளை மீறுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சூளைமேடு பகுதியில் போலீசார் இரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

3 arrested including woman and her husband at Choolaimedu in Chennai after assaulted police

அப்போது சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்தார். சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பிரீத் அனலைசர் மூலம் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்யராஜ், தனது மனைவி அக்சயாவை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு அக்சயா வந்தார். அவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் மட்டுமே பைன் போட வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பைன் போடக்கூடாது. எங்கே உங்களது ரூல்ஸ் புக் என கேள்வி எழுப்பினார். மேலும் போலீஸ்னாலே பிராடு தானே என அவர் விமர்சனம் செய்ததோடு, எம்பி, எம்எல்ஏ யாரை கூப்பிட வேண்டும்? என சீறினார்.

3 arrested including woman and her husband at Choolaimedu in Chennai after assaulted police

மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அக்சயா, போலீஸ்காரர் ஒருவரையும் தாக்கினார். மேலும் அங்கிருந்த பொருட்களை போலீஸ் மீது தூக்கி வீசி தாக்கினார். இதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜ், அவரது மனைவி அக்சயா மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+