3 நீக்கம்.. 5 வார்னிங்.. பறந்து வந்த எச்சரிக்கை மணி.. இந்திய அணி செய்ய வேண்டிய முக்கியமான மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்து உள்ளது. டி 20 தொடரில் வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் மோசமாக ஆடி தோல்வி அடைந்து உள்ளது.

நேற்று மழையால் பாதிக்கப்பட்ட கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 47.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் இறங்கிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களிலேயே 104/1 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை வீழ்த்துவதற்கே இந்திய அணி படாதபாடு பட்டது. நேற்று இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எதுவுமே சரியானதாக இல்லை.

நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. 2024ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.

பண்ட் நீக்கம் - சஞ்சு சாம்சன்

பண்ட் நீக்கம் - சஞ்சு சாம்சன்

இந்திய அணியில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றம் என்றால் அது மிடில் ஆர்டரில் மாற்றம் செய்வது. ரிஷாப் பண்டை அணியில் இருந்து நீக்க வேண்டும். அவரை உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்க வேண்டும். உள்ளூர் போட்டிகளில் அவர் பார்ம் பெற்ற பின் மீண்டும் அணியில் சேர்க்கலாம். அதுவரை அவருக்கு நீண்ட ஓய்வு கொடுக்க வேண்டும். மாறாக சஞ்சு சாம்சனை அணியில் எடுக்கலாம். அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டதே இல்லை. அவரை தொடர்ச்சியாக அணியில் எடுப்பதே சரியாக இருக்கும். அவருக்கும் நீண்ட வாய்ப்பு வழங்கி சோதனை செய்து பார்க்க வேண்டும்.

பவுலிங் - பும்ரா

பவுலிங் - பும்ரா

இந்திய அணியின் பவுலிங்கில் உடனடியாக விக்கெட் டேக்கர்களை எடுக்க வேண்டும். தற்போது அணியில் அர்ஷிதீப் சிங் மட்டுமே அவ்வப்போது விக்கெட் எடுக்கிறார். மற்றபடி உம்ரான் மாலிக் சில போட்டிகளில் விக்கெட் எடுக்கிறார். ஆனால் முதல் பவர் பிளேவில் விக்கெட் எடுக்க இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பும்ராவும் அடிக்கடி காயம் காரணமாக ஆட முடிவது இல்லை. இதனால் இந்திய அணி உடனடியாக பவுலிங்கில் அதிரடி மாற்றங்களை செய்ய வேண்டும். நல்ல பாஸ்ட் பவுலர்களை தற்போது நடந்து முடிந்த விஜய் ஹாசரே போன்ற தொடர்களில் இருந்து கண்டுபிடித்து அணிக்குள் எடுக்க வேண்டும்.

 ஆல் ரவுண்டர் - ஹூடா

ஆல் ரவுண்டர் - ஹூடா

இன்னொரு பக்கம் இந்திய அணியில் நல்ல ஆல் ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் உருவெடுத்து வருகிறார். ஆனால் இவருக்கும் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. ஜடேஜாவும் அடிக்கடி காயம் காரணமாக ஆடுவது இல்லை. ஒரே உறுதியான ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மட்டுமே இருக்கிறார். மற்றபடி தீபக் ஹூடா ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடுகிறார். அவரின் பேட்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் இந்திய அணி உடனடியாக ஒரு நல்ல பேட்டிங் ஆல் ரவுண்டரை எடுக்க வேண்டும். சுந்தர் காயம் அடையும் பட்சத்தில் அணியில் விளையாட ஒருவர் தேவைப்படும். ஷரத்துல் சரியாக ஆடாத பட்சத்தில் சாகரையாவது அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஓப்பனிங் - யார்?

ஓப்பனிங் - யார்?

இந்திய அணியில் இன்னொரு குழப்பம் ரோஹித் சர்மாவுடன் ஒருநாள் போட்டிகளில் ஆட போகும் ஓப்பனர் யார் என்பது. கே எல் ராகுல் பார்மில் இல்லை. இப்போது நியூசிலாந்து ஒருநாள் தொடரில் தவான், கில் இருவரும் கொஞ்சம் சுமாராக ஆடினார்கள். இவர்கள் மூவரில் ஒருவர்தான் ரோஹித் சர்மாவுடன் ஆட உள்ளார். அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த வருடம் உலகக் கோப்பை இந்திய பிட்சில் நடக்க உள்ளது. இதனால் கில்லை இப்போதே இந்திய அணியில் அதிகம் பயன்படுத்தலாம். ஆனால் இந்திய தேர்வுக்குழு யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்பின் பவுலிங்

ஸ்பின் பவுலிங்

ஐசிசி டாப் அணிகளில் தற்போது மோசமான ஸ்பின் பவுலிங்கை கொண்டு இருக்கும் அணி என்றால் அது இந்திய அணிதான். இந்திய அணியில்தான் தற்போது சாஹல், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என்று யாருமே விக்கெட் எடுப்பது இல்லை. ஆசிய கோப்பை தொடரிலும் சரி, டி 20 உலகக் கோப்பை தொடரிலும் சரி இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் மிக மோசமாக இருந்தது. அடுத்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி நல்ல இரண்டு ஸ்பின் பவுலிங் விக்கெட் டேக்கர்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+