சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வாரிசு அரசியல்.." துரை வைகோவை எதிர்த்த.. மதிமுக 3 மாவட்ட செயலாளர்கள் சஸ்பெண்ட்.. வைகோ அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை : கடந்த நில நாட்களுக்கு முன்னர் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துவிடலாம் எனவும், வைகோவின் மகனான துரை வைகோவுக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிராக பேசிய சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் உட்பட பல மூத்த நிர்வாகிகள் கடந்த மார்ச் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ராகு கிரஹஸ்த சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி - இந்த 6 ராசிக்காரர்கள் கவனம் ராகு கிரஹஸ்த சூரிய கிரகணத்தை ஒட்டி நிகழும் சனி பெயர்ச்சி - இந்த 6 ராசிக்காரர்கள் கவனம்

அப்போது, மதிமுகவில் நடைபெறவுள்ள உட்கட்சி தேர்தல், கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை என்று, கட்சியின் தலைமை பொறுப்பை துரை வைகோவுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகாரை கிளப்பினர்.

மதிமுக துரை வைகோ

மதிமுக துரை வைகோ

மேலும் அதிரடி நடவடிக்கையாக கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருத்தினர். இதனால் மதிமுகவுக்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், துரை வைகோவுக்கு எதிராக திடீர் கூட்டணி சொந்த கட்சியிலேயே உருவான நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மவுனம் காத்து வந்தார். ஆனால் சொந்த கட்சியினரை பகைத்துக் கொள்ள விரும்பாத அதே நேரத்தில் கட்சியில் மகனுக்கு முக்கியத்துவத்தையும் அதிகரித்தார்.

மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில மூத்த நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுகவின் வாரிசு அரசியலா என அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் பொதுக்குழுவிலும் இதுகுறித்து காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

வைகோவுக்கு கண்டனம்

வைகோவுக்கு கண்டனம்

இதன் தொடர்ச்சியாக அந்த பொதுக்குழுவில் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில்" மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் செயற்படுத்தி, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

கட்சியிலிருந்து இடை நீக்கம்

கட்சியிலிருந்து இடை நீக்கம்

இந்த சூழலில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நீக்கத்தின் பின்னணியில் துரை வைகோதான் முழுமையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் வாரிசு அரசியலை எதிர்த்தார்கள் என்பதற்காக, வாரிசு அரசியலை எதிர்த்து தனிக் கட்சி கண்ட வைகோவாலேயே நீக்கப்பட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Sivagangai, Tiruvallur and Virudhunagar district secretaries have been suspended for speaking out against the appointment of Durai Vaiko, Vaiko's son and saying that Madhimugai could be dissolved and merged with the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X