IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!
சென்னை: தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறையில் அவ்வப்போது அதிகாரிகளின் பதவி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில், இன்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் இன்று (மார்ச் 14) வெளியிட்ட அறிவிப்பில், தமிழக போலீஸ் உளவுத்துறை டிஜிபியாக பால நாகதேவி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏடிஜிபியாக இருந்து டிஜிபியாக பால நாகதேவி பதவி உயர்வு பெற்றார்.

பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பாலநாக தேவி, உளவுத்துறை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். உளவுத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் ஐபிஎஸ் நியமிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி சந்தோஷ் குமாருக்கு பொருளாதார ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சொந்த ஊராகக் கொண்ட பால நாகதேவி 1995 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். போதைத் தடுப்பு பிரிவின் உளவுப் பிரிவிலும், நீலகிரி எஸ்.பி-யாகவும், கோவை மண்டல டி.ஐ.ஜி-யாகவும் பணியில் இருந்துள்ளார். மதுரை சரக முதல் பெண் டி.ஐ.ஜி-யாக கடந்த 2012-ல் அவர் நியமனம் செய்யப்பட்டார்.
மதுரை டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்பதற்கு முன் சென்னையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி-யாக இவர் இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில், பால நாகதேவி பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக மாற்றப்பட்டு பணியாற்றி வந்த அவருக்கு டிஜிபி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications