ஓ, டீல் ஓகே?.. ரவி பச்சமுத்தா.. எடப்பாடியின் மாஸ் கூட்டணி.. திமுகவுக்கு லாபம்.. யார் சொல்றது பாருங்க

எடப்பாடி பழனிசாமியின் பேட்டி குறித்து மூத்த பத்திரிகையார் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு, பாஜகவுடன் கூட்டணி வைக்க நேர்ந்தால், இந்த விஷயத்தை முதலில் முடிவு செய்து கொண்டு பேச வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு வரும்போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.. பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி பாஜக தேசியக் கட்சி. அதிமுக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை சிறப்பாக ஆண்ட கட்சி அதிமுக. இரண்டு கட்சிகளும் வேறு வேறு என்று கூறியுள்ளார். இந்த பேட்டி பல்வேறு அதிர்வலைகளை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

 குஷி சந்தோஷம்

குஷி சந்தோஷம்

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க துணிந்துவிட்டாரா? அப்படியானால் தனித்து போட்டியிடவும் முடிவு செய்துவிடுவார்களா? என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.. அதேசமயம், அமித்ஷாவையே இவ்வாறு பேசிவிட்டது, பாஜகவை ஏற்காத எடப்பாடி டீமுக்கு பெரும் குஷியை தந்துள்ளதாகவும் தெரிகிறது.. இந்நிலையில், எடப்பாடி பேச்சு குறித்து, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் தன்னுடைய அனுமானங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

 ரவி பச்சைமுத்து

ரவி பச்சைமுத்து

"எடப்பாடி தலைமையிலான மெகா கூட்டணியில் யார் யார் சேருவார்கள் என்று தெரியாது.. தேமுதிக, புதிய தமிழகம், பாமக, வாசன் கட்சி, இவங்க எல்லாம் எப்படி இருப்பார்களோ தெரியாது.. ஒருவேளை பாஜக இவர்களை எல்லாம் இணைத்து கொள்ள முன்வந்தால், எடப்பாடி பழனிசாமி தனித்தே விடப்படுவார்.. ஆனால், பாஜக இல்லாத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி தனி கூட்டணி வைத்தார் என்றால், அது துணிச்சலான முடிவுதான்.. காரணம், தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை என்பது நிறையவே உள்ளது.. ஆனால், பாமக, தேமுதிக, வாசன், இவங்க எல்லாம் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தினாலும்கூட, அது திமுகவுக்குதான் லாபம் என்பதையும் மறுக்க முடியாது.

 40 + 1 சதவீத சீட்டுக்கள்

40 + 1 சதவீத சீட்டுக்கள்

டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பாஜக உறுதி தந்துள்ளதாக தெரிகிறது.. காரணம், அதிமுக கூட்டணியில் நிற்கும் பாஜக வேட்பாளருக்கு முக்குலத்தோர் ஓட்டு நிச்சயம் கிடைக்கும் என்பதால் அதை வீணாக்கி கொள்ள விரும்பாது.. கடந்த வாரம் டிடிவி தினகரன் ஒரு பேட்டி தந்தார்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 40 சீட்டுக்களை கேட்டேன்.. ஒருசிலர் செய்த சதியால் அது நிறைவேறாமல் போய்விட்டது என்று சொன்னார்.. ஒருசிலர் என்று தினகரன் சொன்னது, எடப்பாடி பழனிசாமி தான் என்று எல்லாருக்கும் தெரியும்.. அதனால்தான், டிடிவிக்கு 1 சதவீதம்கூட இடமில்லை என்று எடப்பாடி கொந்தளிக்கிறார்..

 ராமதாஸ்

ராமதாஸ்

இப்படி மாறி மாறி கொந்தளிப்புகள் நடந்தாலும், தேர்தல் நெருக்கத்தில் எல்லாமே காணாமல் போயவிடும்.. தேர்தல் என்று வரும்போது, பாஜக சொல்லும் விஷயத்தை எடப்படி பழனிசாமி கேட்டுக் கொள்வார் என்றே தெரிகிறது.. பாரிவேந்தர் மகன், தற்போது கட்சி ஆபீசுக்கே சென்று சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பது, கூட்டணி பலத்தை அதிகரிக்க செய்யவே செய்யும்.. அதேசமயம், எடப்பாடி 2 விஷயங்களை உணர்ந்திருக்கவே செய்கிறார்.. பாஜக நிர்ப்பந்திக்கவே செய்யும் என்ற விஷயத்துக்கு அடிபணிந்து செல்ல வேண்டும் மற்றொன்று, பாஜகவை விட்டு விலகினால் தமிழகத்தில் கட்சி சிறப்பாகவே நடத்த முடியும், இந்த 2 விஷயங்களையும் எடப்பாடி நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

பாஜக தனி அணி வைத்தால், அதில் பாமக போகுமா என தெரியாது.. அதேபால தேமுதிகவும் போகுமா என தெரியாது.. பாஜக எதிர்ப்பு அதிகம் உள்ளதால், அதிமுகவுடன் கூட்டணி வைக்கும்போது, அந்த எதிர்ப்பு குறையும் என்று பாமக, தேமுதிக நினைக்கிறார்கள்.. மேலும், திமுக அரசுக்கும் எதிர்ப்பு என்பது இந்த ஒன்றரை வருடங்களிலேயே துவங்கிவிட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், சொந்த கட்சிக்காரர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை.. இந்த எதிர்ப்பை அறுவடைய செய்யும் அளவுக்கு மெகா கூட்டணி இருக்க வேண்டுமே தவிர, நீர்த்து போகும் அளவுக்கு கூட்டணி அமைந்துவிடவும்கூடாது.

 டீல் ஓகே?

டீல் ஓகே?

வரப்போகும் எம்பி தேர்தலால், எந்தவித லாபமும் இல்லை என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்.. அதனால், அவரது இலக்கு சட்டமன்றத் தேர்தலாகவே இருக்கிறது.. எனினும், எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க நேரிட்டால், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை எல்லாம் தன் தலைமையிலான அணியில் இணைவதற்கான முயற்சியை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும்.. முதலில் அந்த கட்சிகளை எல்லாம் தன் பக்கம் கொண்டு வந்துவிட்டு, அதற்கு பிறகு, பாஜகவிடம் பேச வேண்டும்.. இப்படி ஒரு டீல் செய்தால், எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+